நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரை சும்மா விட மாட்டேன் என நடிகை விஜயலட்சுமி நாளை முதல் தனது ஆட்டத்த ஆரம்பிக்கப் போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீரழித்து விட்டு  ஏமாற்றியதாக காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு அவ்வப்போது சீமானுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை விஜயலட்சுமி. இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நாம் தமிழர் கட்சி தம்பிகளா? என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க? ராஜீவ்காந்தியை இழிவு செய்துவிட்டு பிறகு எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே போட்டு விடுவார்கள் என்ற பயமா? கொஞ்ச நேரத்திற்கு முன்பு ரஜினி சாருக்கு ஏதாவது நடந்தால் நாங்கள் துணை நிற்போம் என சொல்கிறீர்கள். என்ன செய்யப்போகிறீர்கள்? அவ்வளவு அசிங்கமாக தலைவரை திட்டிக் கொண்டிருந்தீர்கள்.  உங்க அண்ணன் சீமான் ரஜினியிடம் காசு வாங்கி விட்டாரா?

காங்கிரஸ்காரர்களிடம் காசு வாங்கிவிட்டு மன்னிப்பு கேட்கிறீர்களா? நாம் தமிழர்கள் கட்சியில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் சொல்கிறேன். சீமானுக்கும் சொல்கிறேன். மூன்று வாரமாக வேலையை விட்டுவிட்டு நான் இங்கே பேசிக் கொண்டிருக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் ஒன்றுகூடிய உடனே அவரிடம் மன்னிப்பு கேட்கத் தோன்றுகிறது இல்லையா? அப்படி என்றால் நான் சும்மாவா? இது கொழுப்புதானே. இது பயங்கர கொழுப்பாக தெரிகிறது.

ஆகையால் நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கப்போகிறேன். நீங்கள் மன்னிப்பு கேட்க போகிறீர்களா? உணர்கிறீர்களா? நைட் -இடியப்பம் சாப்பிட்டுவிட்டு இருந்து வருகிறார். போராட்டம் அல்ல. என் உயிர் போகிற வரைக்கும் நான் உட்கார்ந்து போராடுவேன். சீமானை தூக்கி உள்ளே வைக்கிற வரை போராடுவேன். சாட்டை துரைமுருகனை கீழ்பாக்கத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டியதில்லை. சீமானை கீழ்ப்பாக்கத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். எதுக்குடா நினைவிடத்துக்கு போறீங்க? சீமானை அவ்வளவு எளிதாக விடமாட்டேன்’’எனத் தெரிவித்துள்ளார்.