பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் பாஜகவுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்ததால், கம்பீரமான கேப்டனின் மானத்தை அக்காவும் தம்பியும் சேர்ந்து இப்படியா கேவலப்படுத்துவது என கதறி அழுகின்றனர்.

கிட்டத்தட்ட தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒப்பந்தம் ஆகும் சூழலில், மீண்டும் திமுகவில் கூட்டணி அமைக்க திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்துள்ளது பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துரைமுருகனிடம் பேசியதை அடுத்து பிஜேபியுடன் கூட்டணி கொறித்துப்பி பேச்சு தொடர்ந்துகொண்டுள்ளது என சுதீஷ் கூறியுள்ளது தேமுதிக தொண்டர்களே கழுவி ஊத்தும் சம்பவமும் நடந்துள்ளது.

துரைமுருகனை சந்தித்தபின் நேராக வீட்டிற்கு வந்த சுதீஷ் “மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை சந்திக்குமாறு பேசினார். அதன் அடிப்படையில் இன்று அவரை சந்தித்து பேசினேன்.  பாஜகவுடன் கூட்டணி என்கிற முடிவை தலைவர் எடுத்தார். அதன்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

தற்போது சென்னையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பியூஸ் கோயல் செல்வதால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும். தேமுதிகவின் பலத்தின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கட்சியின் பலம் எங்களுக்குத்தான் தெரியும், எங்கள் தேவையை தெரிவித்துள்ளோம். நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டணி இறுதியாகலாம்.  தமிழகத்தில் அடுத்த முறை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார் என சுதீஷ் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, திமுக கூட்டணிக்கு வர விரும்புவதாக எல்.சுதீஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவரிடம், தலைவர் ஊரில் இல்லை, கொடுப்பதற்கும் எங்களிடம் சீட் இல்லை என தெளிவாக கூறி விட்டேன். நாங்களே 20 தொகுதியில்தான் போட்டியிடுகிறோம்.  ஸ்டாலினிடம் ஆலோசிக்க போன் செய்தேன். லைன் கிடைக்கவில்லை. தேமுதிக மீண்டும் வந்து பேசினால், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என துரைமுருகன் தெளிவாக பேசி அனுப்பிய அடுத்த சில நிமிடங்களில் இப்படி பல்டி அடித்துள்ளதை அரசியல் விமர்சகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

இப்படி ஒரே நாளில் மாறி மாறி கூட்டணி பேசுவதாக, பேரம் தொடருவதால் ஒருபாக்கம் திமுக மூக்கை அறுத்து அனுப்பியதும், மற்றொரு பக்கம் பொதுக்கூட்ட மேடையிலிருந்து விஜயகாந்த்தின் புகைப்படத்தை அதிமுக அகற்றியதும் விஜயகாந்தின் மானத்தை இப்படி மானாவாரியா வாங்குகிறார்கள் என விஜயகாந்த் மீது பாசம் வைத்திருக்கும் விசுவாசிகள் குமுறிக் குமுறி அழுகின்றனர்.

உலக அரசியல் வட்டாரத்தில் சில நிமிட இடைவேளையில் துட்டுக்கும் ஒன்னு ரெண்டு சீட்டுக்கு கூட்டு வைக்க நடத்திய தேமுதிகவின்  பேரம் தமிழக மக்களை அதிர வைத்துள்ளது. அரசியல் வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் இப்படி மாறி மாறி பேரம் பேசியிருக்க வாய்ப்பே இல்லை என  தமிழக அரசியல் மானம் மானாவாரியா பறந்து கொண்டிருக்கிறது.