தேமுதிக தலைவர் விஜயகாந்த்  உடல் நலம் குன்றிய நிலையில் அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடு சென்று  வருவார். இந்நிலையில் விஜயகாந்த் நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.  அவருடன் அவரது மனைவி பிரேமலதா, அவரது 2-வது மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

ஏற்கனவே சிகிச்சைக்காக  விஜயகாந்த் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். தற்போது அவர்  இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றுள்ளதாகவும், வரும் தேர்தலில் அவர் புத்துணர்ச்சியுடன் பிரச்சாரம் செய்வார் என்றும் அவரது கட்சியினர் கூறியுள்ளனர்