நடிகரும் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளருமான, கேப்டன் விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் மனைவி பிரேமலதாவுடன் சென்று ஐமேக்ஸ் தியேட்டரில் திரைப்படம் பார்த்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.

கேப்டன் விஜயகாந்த், ஏற்கனவே கடந்த வருடம்  உடல் நல குறைவிற்காக, அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில்... ஒரு சில காரணங்களால் மீண்டும் சென்னைக்கு  வரும் சூழல் ஏற்பட்டது. பின் அவ்வப்போது அமெரிக்கா சென்று சிச்சை எடுத்து திரும்பினார். 

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் திடீர் என, அவர் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததாக செய்திகள் வெளியானது. இதன் காரணமாக மீண்டும் சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றார். அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, மகன் சண்முகப் பாண்டியன் ஆகியோரும் சென்றனர்.

தற்போது தீவிர சிகிச்சைக்கு பின் கேப்டன் விஜயகாந்தின் உடல் நிலை சீராகியுள்ளது. இது குறித்து  குறித்து அவ்வப்போது செய்திகளை விஜயகாந்த் தரப்பை சேர்ந்தவர்கள் வெளியிட்டும் வந்தனர். 

தற்போது தன்னுடைய உடல் நிலை நன்கு தேறி இருப்பதை என்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்த விரும்பிய தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த்,  மனைவி பிரேமலதாவுடன் ஐமேக்ஸ் திரையரங்கில், அக்வாமேன் திரைப்படம் பார்த்ததை படத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்களும், கட்சி உறுப்பினர்களும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.