உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். உடந்த ஓராண்டுக்கு மேலாக அவர் கட்சி நிழ்ச்சிகள் எதிலும்பங்கு கொள்ளவில்லை. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கூட வேனில் இருந்தபடியேகரங்களை அசைத்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் நடந்தது.

இந்த விழாவில் நீண்ட நாட்களுக்குப் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது,  உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்த்துக்காக விடியும். 

அப்போது தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன். அடுத்த முறை வரும்போது உங்களிடம் 1 மணி நேரம் பேசுவேன். இதுபோல் தமிழகம் முழுவதும் செல்வேன். இந்த விழாவில் பங்கேற்க வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என தெரிவித்தார்.

மிகுந்த சிரமப்பட்டே விஜயகாந்த் பேசினார். ஆனாலும் தங்கள் தலைவர் பேசிய அந்த ஒரு சில வார்த்தைகளால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.