அமெரிக்கா செல்வதற்கு முன்பாக கட்சியை பார்த்துக் கொள்ளுமாறு தன்னிடம் தான் தனது அப்பா கூறிவிட்டு சென்றதாக விஜயபிரபாகரன்  கூறியுள்ளார்.

திருப்பூரில் நேற்று முன்தினம் கேப்டன் மகன் விஜயபிரபாகரன் பேசிய பேச்சுகள் அரசியல் அரங்கில் பரபரப்பான விவாததை கிளப்பியது. திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியை டார்கெட் செய்து விஜயபிரபாகரன் பேசிய பேச்சு அவரது கட்சி நிர்வாகிகளை குஷிப்படுத்தியது. அதோடு மட்டும் அல்லாமல் தன்னுடைய அப்பா உடல் நிலை குறித்தும் அவர் உணர்ச்சிப்பெருக்கோடு பேசினார். 

தன்னுடைய அப்பா தற்போது முழுவதும் குணமாகிவிட்டதாகவும் விரைவில் அவர் ஒரு மணி நேரம் பேசுவார் என்றும் கூறி அசத்தினார். இதற்கிடையே தனது தந்தை அமெரிக்கா சென்றது ஏன், அங்கு அவருக்கு சிகிச்சை முடிந்து திரும்பி வந்தது எப்படி என்றும் விஜயபிரபாகரன் தெரிவித்தார். 

மூத்த மகன் என்கிற வகையில் தானும் தந்தையுடன் அமெரிக்கா சென்று அவரது சிகிச்சையை முன்னெடுக்க விரும்பியதாக விஜயபிரபாகரன் கூறினார். ஆனால் தன்னுடைய அப்பா நீ இங்க இருந்து கட்சியை பார்த்துக் கொள் என்று தன்னிடம் கூறியதாகவும் கண் கலங்கினார். இதன் மூலம் கட்சியின் அடுத்த வாரிசு தான் தான் என்பதை தனது அப்பா கூறிவிட்டார் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார் விஜயபிரபாகரன்.

இதில் வேடிக்கை என்ன என்றால் சுதீசும் அமெரிக்கா செல்லவில்லை. விஜயகாந்திற்கு சிகிச்சை நடைபெறம் நிலையில் நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது சுதீசிடம் கேட்கப்பட்டது. அதற்கு கட்சியை பிறகு யார் பார்த்துக் கொள்வது என்கிற ரீதியில் அவர் பதில் அப்போது இருந்தது. ஆனால் இப்போது விஜயபிரபாகரன் கட்சியை தான் தான் பார்த்துக் கொண்டதாக சொல்ககிறார். எது எப்படியோ கட்சியின் அடுத்த வாரிசு விவகாரத்தில் சுதீஷ் விட்டுக் கொடுத்து செல்லும் நிலை ஏற்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.