கேப்டன் மகனின் எட்டு வருட காதல்! எடையை குறைந்தததே காதலிக்காகத்தான்! கொங்கு மாமனார் ஆகிறார் விஜயகாந்த்!
திருப்பூரில் சமீபத்தில் தே.மு.தி.க.வின் முப்பெரும் விழா நடந்தது. இந்த மேடையில் பேசிக் கொண்டிருந்த பிரேமலதா, திடீரென ’உங்களுக்கெல்லாம் ஒரு இனிப்பான சேதி. எங்கள் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கிறோம். பொண்ணு இந்த கொங்கு மண்டலம்தான். திருமண நிச்சயதார்த்தம் உள்ளிட்ட விஷயங்களை விரைவில் அதிகாரப்பூர்வமா கேப்டன் அறிவிப்பார்!’ என்று கட்சி விழாவை கல்யாண விழாவாக மாற்றினார். மேடையில் அமர்ந்திருந்த விஜயகாந்தும் இதை ரசித்துக் கேட்டார்.
இந்த நிலையில் கேப்டன் மகனின் கல்யாணம் பற்றி ஒரு தகவல் தடதடக்கிறது. அதாவது இந்த திருமணம் ஒரு காதல் திருமணமாம். அதாவது விஜயபிரபாகரன் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு பிரைவேட் எஞ்சினியரிங் காலேஜில் படித்திருக்கிறார். அப்போது அவரோடு படித்த ஒரு பெண்ணோடு காதல். கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கிறதாம் இந்த காதல்.
ஆக்சுவலாக காலேஜில் படிக்கும் போதும், அதன் பின்னும் கேப்டனின் மூத்த மகன் அதிக உடல் எடையுடன் தான் இருந்தார். ஆனால் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் பையன் செம்ம ஸ்லிம் & ஸ்லீக் ஆயிட்டார். எல்லாத்துக்கும் காரணம் அந்த பொண்ணுதான். ”அன்பா பேசிப்பேசியே பிரபாவ உலுக்கெடுத்திடும் அந்த பாப்பா. ‘இப்படி இரு சின்ன கேப்டன், அப்படி நட சின்ன கேப்டன்’ன்னு செல்லமா கூப்பிட்டு உருக வெச்சே சக்ஸஸ் பண்ணிக்கும் காரியத்தை.
காலேஜ் முடிச்சுட்டு, அரசியலுக்குள்ளே வர்றதுக்கு முன் போட்டிகளுக்காக நாய் வளர்ப்பு, பாட்மின்டன் டீமை ஏலத்தில் எடுத்ததுன்னு விஜயபிரபா நிறைய பண்ணிட்டிருந்தாரு. எல்லாத்துக்கும் இந்த பொண்ணுதான் ஊக்கம். பையன ரொம்ப நல்ல பாதையில டியூன் பண்றதாலே அந்த பாப்பாவை கேப்டனுக்கும், பிரேமலதாவுக்கும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு.
அதனாலதான் கல்யாண வயசு வந்ததும் சட்டுபுட்டுன்னு காரியத்துல இறங்கிட்டாங்க.” என்கிறார்கள். சமீபத்துல கோயமுத்தூர் ரேஸ்கோர்ஸ்ல உள்ள தாஜ் விவாண்டா ஹோட்டல்ல வெச்சு இரண்டு குடும்ப பெரியவங்களும் திருமணம் பத்தி முதல் கட்ட பேச்சுவார்த்தை பேசி முடிச்சுட்டாங்கன்னு சொல்லப்படுது.
இந்த காதல் திருமணம் தொடர்பாக இன்னும் சில சுவாரஸ்யங்களும் இருக்குது...
* ஒண்ணு, அந்த்ப் பொண்ணு திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகியின் மகளாம். டப்மாஷ் டிரெண்டிங் உச்சத்தில் இருந்த காலத்தில் அந்தப் பொண்ணு கூட பிரபாகரனுக்கு செல்ல சண்டை. உடனே தன்னோட அம்மா பிரேமலதா கூட சேர்ந்துகிட்டு, வி.ஐ.பி. படத்தில் தனுஷ், சரண்யா பொன்வண்ணன் பேசும் ‘அடப்பாவீ உனக்கு லவ்வெல்லாம் கூட இருக்காடா?’ எனும் டயலாக்கை பேசி டப்மேஷ் பண்ணி அதை வைரலாக்கி கலாய்த்திருக்கிறார்.
* ரெண்டு, இந்த திருமணத்துக்கு கூடிய விரைவில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு, தை மாதத்தில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் திருமணம் நடைபெறலாம்! என்றும் தகவல்.
வாழ்த்துக்கள்! ஆங்!