அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்தின் உடல் நிலை பற்றி தவறான வதந்தி பரப்பியவர்களின் வாயடைக்க வைத்துள்ளார் அவர். விஜயகாந்த் உடல் நலத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி தேமுதிகவினரை உற்சாகப்படுத்தி வருகிறது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குன்றிய நிலையில் சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாடு சென்று வருகிறார். சில தினங்களுக்கு முன் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு விதமாக தகவல்கள் வெளிவந்து தேமுதிக தொண்டர்களை கலங்கடித்தன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விழாவை அமெரிக்காவில் நண்பர்களோடு கொண்டாடியபோது எடுத்த 2 புகைப்படங்களை விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விஜயகாந்த் ஆரோக்கியமான நிலையில் காட்சியளிக்கிறார். 

 

அமெரிக்கா சென்றுள்ள அவருடன் அவரது மனைவி பிரேமலதா, அவரது 2-வது  மகன்  சண்முக  பாண்டியன்  ஆகியோர் உடன் சென்றுள்ளனர். சில தினங்களுக்கு முன் விஜயகாந்தின் மூத்த மகன் அவரது தந்தையில் உடல் நலம் குறித்து பேசுகையில், ‘’அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை விஜயகாந்த் விரைவில் நலம் பெறுவார். கம்பீர குரலுடன் அவர் மீண்டும் வருவார். பாராளுமன்ற தேர்தலுக்குள் அவரது உடல்நிலை சரியாகி விடும் என்று நம்புகிறேன்’’ எனத் தெரிவித்திருந்தார். இருப்பினும் விஜயகாந்த் ஆரோக்கியத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருப்பதால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வாங்க கேப்டன்...!