தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டிற்கு சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் நலம் விசாரித்தார்.

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்ன்னும் முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. பாமகவும் தேமுதிகவும் ஒரே தொகுதிகளை கேட்டு வருவதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராமதாஸும், அன்புமணியும் விஜயகாந்தை அவரது விட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் நேரில் சென்று  நலம் விசாரித்தனர். அப்போது விஜயகாந்த் தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 

தமிழக முதல்வர்கள் யாரும் இதுவரை விஜயகாந்த் வீட்டிற்கு சென்றதில்லை. விதிவிலக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விஜயகாந்தை வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த அணுகுமுறையை தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாராட்டி வருகிறனர். கூட்டணிக்கட்சிகளுக்குள் இருந்த பிணக்குகள் இந்த சந்திப்பின் மூலம் தீர்க்கப்பட்டு கூட்டணிக்கட்சிகள் பேதமின்றி களப்பணியாற்றவும் இந்த சந்திப்பு உதவும் என அதிமுக கூட்டணியினர் கருதுகின்றனர்.