கள்ளக்குறிச்சியில் தோற்றால் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த முடியாது என்பதால் இப்போதே அதை நடத்தி விஜயகாந்த் மைத்துனரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளர். 

விழுப்புரம் மாவட்ட, தேமுதிக செயலர் வெங்கடேசனுக்கும், விஜயகாந்த் மைத்துனரும் கள்ளக்குறிச்சி மக்களவை வேட்பாளருமான எல்.கே.சுதீஷுக்கும் எப்போதும் ஒத்துப்போவதே இல்லை. ஆனாலும், தலைமைக்கு கட்டுப்பட்டு, கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சுதீஷுக்கு ஆதரவாக, வெங்கடேசன், தேர்தல் வேலையை இழுத்துப்போட்டு செய்து வந்தார். மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

ஆனால், வெங்கடேசனோ, சுதீஷுக்கு தேர்தல் வேலை பார்த்த கட்சி நிர்வாகிகளை அழைத்து ஏப்ரல், 23ம் தேதியே, நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்தி விட்டார். இது குறித்து எல்.கே.சுதீஷ் கேட்டபோது, ’தேர்தலில் நீங்க தோற்று விட்டால் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த முடியாது. அதனால், முன்கூட்டியே நடத்தி விட்டோம் எனக் கூறி இருக்கிறார்கள். இதனால் கடுப்பான சுதீஷ், தன் அக்காள் பிரேமலதாவிடம் புலம்ப, அவரோ, ‘ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை அமைதியாக இரு' எனக் கூறி அமைதி படுத்தி வைத்திருக்கிறாராம்.