Vijayakanth returned to Chennai
சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று நாடு திரும்பினார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த், ஏற்கனவே சிங்கப்பூரில் உடல் நலப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் மீண்டும் சிங்கப்பூர் சென்றார். தான் சிங்கப்பூர் சென்றதை கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டு, விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார்.

விஜயகாந்த் பேசுவதில் தொடர்ந்து சிரமம் இருந்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. சிகிச்சை பெறும் உடை அணிந்து மருத்துவமனை ஊழியருடன் விஜயகாந்த் நிற்கும் புகைப்படமும் வெளியாகி இருந்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் யாருக்கும் ஆதரவும் இல்லை என்றும் விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் சிங்கப்பூர் சென்று தனது மருத்துவ சிகிச்சையை நிறைவு செய்துள்ளார். சிகிச்சை முடிந்து இன்று விஜயகாந்த், இந்தியா திரும்பியுள்ளார்.

செய்தியாளர் தாக்கப்பட்ட வழக்கில் விஜயகாந்த்துக்கு பிடிவாரண்ட் ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் தரப்பு மனு தாக்கல் செய்தது. உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, பிடிவாரண்ட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
