ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடை தேர்தலில், தேமுதிக உள்பட அனைத்து கட்சிகளும் போட்டியிடுகின்றன.
தேமுதிக வேட்பாளராக, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மதிவாணன் போட்டியிடுகிறார். தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளரை ஆதரித்து, மூத்த நிர்வாகிகள் யாரும் இதுவரை கலந்து கொண்டாதாக தெரியவில்லை.
மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால், விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுநீரக கோளாறு இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால், தேமுதிக தொண்டர்கள் சோர்வ்டைந்துள்ளனர். பல மாதங்களுக்கு பிறகு, விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். அவரது பேச்சை கேட்கலாம் ஆவலுடன் காத்திருந்த தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, பிரேமலதா விஜயகாந்த், வேட்பாளரை ஆதரித்து ஓரிரு நாட்களில் சூறாவளி பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார். தற்போது அவர், அதிக சிரமம் எடுக்க கூடாது என்றும், ஓய்வு மிகவும் அவசியம்தேவை என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால், அவர் பிரச்சாரத்தை ஒதுக்கிவிட்டு வீட்டிலேயே ஓய்வெடுக்க இருப்பதாக தெரிகிறது.