Asianet News TamilAsianet News Tamil

கேப்டன் நல்லா நடந்தா இத்தனை தொகுதி.. நல்லா பேசினா அத்தன தொகுதி.. பிரசாரத்துக்கே வர்லேன்னா கூட்டணியே கிடையாதாம்...? பிரேமாவை கண் சிவக்க வைத்த அதிமுக

நாடு திரும்பியதும் அவரோட அரசியல் ஈடுபாடு, கூட்டணிக்கு அவர் தர இருக்கிற பங்களிப்புகளை பொறுத்துதான் சீட்டுகளையும், எந்தெந்த தொகுதிகள் அப்படிங்கிறதையும் நாங்க ஒதுக்க முடியும். தப்பா எடுத்துக்காதீங்க சகோதரி, இது அரசியல். நாங்க எதிர்பார்க்கிறதுல உள்ள அர்த்தமும், நியாயமும் உங்க கணவருக்கு நல்லாவே புரியும்.

vijayakanth premalatha Eye reddened AIADMK
Author
Tamil Nadu, First Published Feb 15, 2019, 12:54 PM IST

அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துவிட்டு நாளை சென்னைக்கு திரும்புகிறார் விஜயகாந்த். கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை நன்றாகவே உடல் நலன் தேறி வருகிறார் என்று பிரேமலதாவே பர்ப்பஸாக தன் கட்சியினரின் கவனத்துக்கு தகவலை பரப்பியுள்ளார். கூடவே ‘மேல்சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16-ம் தேதி சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு தாயகம் திரும்பவுள்ளார்’ என்று கட்சி சார்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். 

இதைத்தொடர்ந்து தமிழகம் எங்குமிருந்து அவரது கட்சியினர் பெரும் வரவேற்பை விஜயகாந்துக்கு கொடுப்பதற்காக விமான நிலையத்தில் குவிய உள்ளனராம். இந்நிலையில், பிரேமலதா ஏன் இந்த தகவலை இப்படி பரப்பியுள்ளார்? என்று அக்கட்சியின் சீனியர்களுக்குள் சிறு அலசல் விவாதம் நடந்துள்ளது. அதில் கிடைத்த தெளிவுகளை, தரவுகளை இப்படியாக பகிர்கிறார்கள் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகிகள்... ”வரும் நாடாளுமன்ற தேர்தல்ல கூட்டணிதான்னு பொருளாளரான திருமதி விஜயகாந்தும், சுதீஷும் முடிவு பண்ணி, தலைவர்ட்ட சொல்லிட அவரும் ஓ.கே. பண்ணிட்டார்.

 vijayakanth premalatha Eye reddened AIADMK

 தி.மு.க. சைடுல பாஸிடீவான எந்த சிக்னலும் இல்லாத நிலையில பி.ஜே.பி. தானா முன் வந்து எங்களை கூட்டணிக்கு அழைச்சாங்க. ஆனா அவங்களே அ.தி.மு.க.வுடைய நிழல்ல இருக்கிறதாலே பொருளாளர் பிரேமலதா யோசிச்சாங்க. ஜெயலலிதாவை வன்மையா எதிர்த்து அரசியல் பண்ணியிருக்கோம், இப்போ மீண்டும் அந்த கட்சி கூட போயி கூட்டணி வெச்சா நல்லா இருக்குமான்னு நினைச்சவங்க, பிறகு அந்தம்மாவே இல்லைன்னு ஆயிடுச்சு, அரசியல்ல சில நெளிவு சுளிவுகளை அணுசரிச்சு போயிட வேண்டிதான்னு முடிவு பண்ணி பி.ஜே.பி.ட்ட ஓ.கே. சொல்லிட்டாங்க.

 vijayakanth premalatha Eye reddened AIADMK

பி.ஜே.பி. இதை அ.தி.மு.க.விடம் சொன்னதும் ஆச்சரியத்தோட அவங்க ரெண்டு மூணு நாள் அலசி ஆராய்ச்சி பண்ணிட்டு ஒரு முடிவை சொன்னாங்க. அந்த கட்சி சார்பாக தடபுடலா பேசக்கூடிய அமைச்சர்தான் தங்களோட கண்டிஷன்களை எங்க கட்சி தலைமைட்ட சொல்லியிருக்கார். அப்போ அவரு சொன்ன விஷயங்கள் மிரள வெச்சிடுச்சு எங்க தலைமையை. அதாவது ‘தி.மு.க.வுக்கு நிகரா உங்க கட்சியையும், உங்க கணவரையும் அம்மா வெறுத்து ஒதுக்கினாங்க. அவங்க இருந்திருந்தால் எந்த ஜென்மத்துலேயும் உங்க கூட கூட்டணி இருந்திருக்காது. ஆனா அம்மா இல்லாம போயிட்ட சூழல்ல சிலரோட வர்புறுத்தலுக்காக இதை நாங்க ஏத்துக்குறோம். vijayakanth premalatha Eye reddened AIADMK

ஆனா உங்க கட்சியோட வாக்கு வங்கிங்கிறது உங்க கணவர்தான். அவரோட முகம், பேச்சு, சுறுசுறுப்புக்குதான் வாக்கு விழும். விஜயகாந்த் எனும் நபரின் செயல்பாடுகளை பொறுத்துத்தான் தே.மு.தி.க.வுடைய வாக்கு வங்கியின் சதவீதம் ஏறும், இறங்கும், சரிஞ்சு விழும். அதனால நம்ம கட்சிகள் கூட்டணி வைக்கிற பட்சத்துல அவரு மீண்டும் எழுச்சியா வந்து மேடைகள்ள பேசுறது, பிரசார வேன்களில் பயணிக்குறதுங்கிற விஷயத்துக்கு சம்மதிக்கணும் நீங்க. என்னடா உடம்பு சரியில்லாத மனிதரிடம் இவ்வளவு எதிர்பார்க்கிறாங்க?ன்னு நினைக்காதீங்க. உங்க கணவருக்கான எழுச்சியை மீட்டெடுங்க, நம்ம கூட்டணிக்கும் அதுதான் நல்லதுங்கிற பொது நல அடிப்படையில்தான் இதை பேசுறோம். vijayakanth premalatha Eye reddened AIADMK

நாடு திரும்பியதும் அவரோட அரசியல் ஈடுபாடு, கூட்டணிக்கு அவர் தர இருக்கிற பங்களிப்புகளை பொறுத்துதான் சீட்டுகளையும், எந்தெந்த தொகுதிகள் அப்படிங்கிறதையும் நாங்க ஒதுக்க முடியும். தப்பா எடுத்துக்காதீங்க சகோதரி, இது அரசியல். நாங்க எதிர்பார்க்கிறதுல உள்ள அர்த்தமும், நியாயமும் உங்க கணவருக்கு நல்லாவே புரியும்.” அப்படின்னு அழுத்தமா பேசியிருக்கார். இதை பொருளாளரும், அவங்க தம்பியும் தீவிரமா ஆலோசிச்சிருக்காங்க.  பொருளாளருக்கு அ.தி.மு.க.வின் இந்த கண்டிஷன்களை பார்த்து ஏக கோபம், கடுமையாக கண்சிவந்து ஆத்திரப்பட்டிருக்கிறார்.

  vijayakanth premalatha Eye reddened AIADMK

’வெயில்ல அலையுறதை தவிர்க்க இவரு பிரசாரத்துக்கே வரமாட்டார்னு நாம சொன்னா, கூட்டணியே கிடையாதுங்கிற ரேஞ்சுக்கு பேசுறாங்க. என்ன அரசியல் இது?’ அப்படின்னு கொதிச்சிருக்கார். அப்புறம் தம்பிதான் யதார்த்த நிலையை எடுத்துச் சொல்லி கூல் பண்ணியிருக்கார். தலைவர் விஜயகாந்த் பூரண நலத்துடன் தமிழகம் திரும்புறதை லைம் லைட்டுக்கு கொண்டு வர முடிவு பண்ணியிருக்காங்க. தலைவர் வெகு ஆக்டீவாக இருக்கிறதை பொறுத்துதான் எங்களுக்கான சீட் எண்ணிக்கை, இடங்கள் எல்லாம் முடிவாகும். தலைவரோட நிலை இப்படியானதுல ஒரு வருத்தம்தான் அதேவேளையில அ.தி.மு.க. அமைச்சரவையே எங்க தலைவருக்கு மக்கள் மத்தியில இருக்க கூடிய செல்வாக்கை வெளிப்படையா பேசுற அளவுக்கு  அவர் உயர்ந்து இருக்குறதை இந்த நேரத்துல நினைச்சு சந்தோஷப்படுறோம்.” என்று நிறுத்தினார்கள். வந்து கலக்குங்க கேப்டன்!

Follow Us:
Download App:
  • android
  • ios