விஜயகாந்துக்கு மேடையில் ஏற்பட்ட ஒரு சம்பவம் தேமுதிக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இதே தினத்தில் தேமுதிக சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதே போல் இன்று நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் அமைப்புரீதியான 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளிக்கு நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மணவர்கள் விஜயகாந்திற்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலப் பிரச்சனைகளால் கடந்த சில மாதங்களாக ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்த அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வந்திருப்பது தொண்டர்களை உற்சாகமடைந்தனர். அதேவேளை பரிசு பொருட்களை எழுந்து நின்று கொடுக்க விஜயகாந்த் விடுப்பப்பட்டார். ஆனால், அவரது விருப்பத்தை கேட்காத பிரேமலதா விஜயகாந்தை உட்கார்ந்து கொண்டே கொடுக்க நிர்பந்தித்தார். அதனையும் மீறி விஜயகாந்த் எழுந்து நின்று பரிசு பொருட்களை கொடுக்க எழுந்தபோது பிரேலதா விஜயகாந்தை எதிர்பாராத விதமாக தள்ளி விட்டார். 

நிதானமின்றி இருந்த விஜயகாந்த் இருக்கையில் தட்டுத்தடுமாறி விழுந்தார். இதனால் பதட்டமாகி போன தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒரு வழியாக மேடையில் இருந்தவர்கள் விஜயகாந்தை தாங்கிப் பிடித்து கொண்டனர். இதனை பார்த்த பத்திரிக்கையாளர்களும், தொண்டர்களும் எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிவிட்டாரே... அந்தம்மா அவரது விருப்பப்படி விட வேண்டியது தானே..? ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என பிரேமலதாவின் பெயரை உச்சரித்து முனுமுனுத்து நகர்ந்தனர்.