இந்நிலையில் மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை மேலும் கட்டுப்படுத்தும் விதமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும் போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட வாரியாக அபராத விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் முகக்கவசம் அணிந்து தங்களது செல்ஃபோனில் செல்ஃபி எடுத்து, அதை வாட்ஸ் அப் , டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் (Whatsapp DP, Status, Facebook, Instagram, Twitter) ஆகிய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு, முகக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
முககவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை,நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த விழிப்புணர்வு புகைப்படத்தை மே3ம் தேதி வரை அவரவர்கள் மொபைலில் டிபியாக(DP)வைத்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.(2-2) pic.twitter.com/6WZPT3C8x1
— Vijayakant (@iVijayakant) April 24, 2020
மேலும் அந்த புகைப்படங்களை அவரவர் செல்போனில் மே 3ம் தேதி வரை டி.பி.யாகவும் வைத்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு முன்னுதாரணமாக கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மாஸ்க் அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்ததோடு மட்டுமல்லாது, டி.பி.யாகவும் வைத்துள்ளார். இதற்கு முன்னதாக தனது கட்சி நிர்வாகியின் இல்ல திருமணத்தை தனது வீட்டில் நடத்தி வைத்த விஜயகாந்த், மணமக்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 24, 2020, 11:35 AM IST