’டிரவுசரை உருவினார் கருணாநிதி... ரத்தத்தை உறிகிறார் ராமதாஸ்...’ விஜயகாந்தையும் புட்டு புட்டு வைத்த வேல்முருகன்..!
விஜயகாந்தும், ராமதாஸும் அரசியல் ஆதாயத்திற்காக கூட்டணி வைத்துள்ளனர் என புதிய வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
விஜயகாந்தும், ராமதாஸும் அரசியல் ஆதாயத்திற்காக கூட்டணி வைத்துள்ளனர் என புதிய வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’எடப்பாடி அரசை கடுமையாக எதிர்த்து வந்த ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். தங்களது வாரிசுகளுக்காக அரசியல் ஆதாயம் கருத்தியே ராமதாஸும், எடப்பாடியும் கூட்டணி சேர்ந்துள்ளனர். விஜயகாந்தை பற்றி ராமதாஸ் என்னிடம் கேவலமாக பேசுவார். விஜயகாந்தை குடிகாரன் என்று தான் கூறுவார். விஜயகாந்த் அரசியலுக்கு வந்தது ராமதாஸுக்கு பிடிக்கவில்லை.
அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து வடமாநிலங்களுக்கு வரும்போது ராமதாஸ் என்னை அழைத்து, ‘’நீதான் பாமகவின் தளபதி. அந்த குடிகார விஜயகாந்த் வந்திருக்கிறான். இந்த நாய்கள் (வன்னிய சமுதாய மக்கள்) ஊர் ஊரா அவர் வரும்போது கொடியேற்றுகிறார்கள். வடதமிழகம் எங்கும் அவனை துரத்த வேண்டும். நீதான் இந்த கட்சி...உன்னை நம்பித்தான் நானே இருக்கிறேன்’ எனக் கூறுவார். வடதமிழ்நாட்டில் எங்கும் விஜயகாந்த் கட்சி கொடி பறக்கக்கூடாது’’என்பதுதான் ராமதாஸ் எனக்கு கொடுத்த வேலை. விஜயகாந்தையும், சொந்த இன மக்களையும் இழிவாக பேசினார். நான் போய் அந்த கொடியையெல்லாம் அவிழ்க்கச்சொல்லி, கொடி கம்பத்தை அறுத்து.. விஜயகாந்த் தொண்டர்களுட சண்டை போடுவேன். ஆனால் நான் இன்று விஜயகாந்துக்கு எதிரி. ராமதாஸ் அவருக்கு நண்பர்.
ஆனால் நான் எதிர்த்தை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் சட்டசபைக்கு விஜயகாந்த் முதன்முறையாக வந்தபோது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எனக்கு வணக்கம் சொல்லி பேரவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என என்னுடன் கலந்துரையாடினார். அவர் மனதில் எதையும் வைத்துக் கொள்ளும் மனிதர் அல்ல. வெளிப்படையானவர். நல்ல மனம் படைத்த அற்புதமான மனிதர். ஆனால், அவரது மனைவி பிரேமலதா அவருக்கு நேர்மாறானவர்.
அப்படி விஜயகாந்தை விமர்சித்த ராமதாஸ் இப்போது அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து பல்லிழிக்கிறார். நான்ப் கடவுளாக, நல்லமனிதனாக ஒரு காலத்தில் மரியாதை வைத்திருந்த ராமதாஸின் எண்ணங்களை தெரிந்து கொண்டு அவரை விட்டு விலகி விட்டேன். காடுவெட்டி குருவின் மரணத்திற்கு காரணம் ராமதாஸ். அவர்ன் இறந்த பிறகு குருவின் குடும்பத்தை துன்பப்படுத்தி வருகிறார் ராமதாஸ்.
கருணாநிதி வன்னியர்களின் டிரவுசரை உருவினார். ராமதாஸ் வன்னியர்களின் ரத்தத்தை உறிந்து கொண்டிருக்கிறார். ராமதாஸிடம் ஒரு ஆய்வுக் குழு உள்ளது. வன்னிய குலத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் அதில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அளித்துள்ள அறிக்கையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக ராமதாஸ் எந்தத் தொகுதிக்கு சென்றாலும், அங்கு அவமானப்பட்டு தான் திரும்புவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் பயந்து போய் விஜயகாந்த் வீட்டிற்கெல்லாம் ராமதாஸ் சென்று வருகிறார்’’ என அவர் கடுமையாக விமர்சித்தார்.