நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எச்.வசந்தகுமார். 72 வயதான இவர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவாக  இருந்து கன்னியாகுமரியில் பிஜேபி பொன் .ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு வென்றுள்ளார். 

இந்நிலையில், தமிழகத்த்தில் காங்கிரஸ் மெகா வெற்றியை பெற்றாலும், நாடுமுழுவதும் பிஜேபியே பெரும்பான்மையான இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும், காங்கிரஸ் கமிட்டி இதனை ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியானது. 

ராகுல் பதவி விலகுவது குறித்த பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர்கள், அவர்களது வாரிசுகளுக்கும் மிரட்டி சீட் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதுவே காங்கிரசின் படு தோழிக்கு காரணம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சிவகங்கையில் போட்டியிட்டு வென்ற கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் வாங்கியது, நான்குனேரி சிட்டிங் எம்.எல்.ஏ வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியை கேட்டு வாங்கியது என காங்கிரஸ்காரர்கள் செம கடுப்பில் உள்ளனர்.

இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வும், தொலைக்காட்சி டிபேட் புகழ் விஜயதரணி, சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் 72 வயதான வசந்தகுமார் மிரட்டி சீட் வாங்கியதாக பகிரங்கமாக கூறியியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில், ராகுல்காந்தி பதவி விலகுவது குறித்து ரஜினியின் கருத்து பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,  ரஜினியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொன்னது உண்மைதான், கொடுத்ததெல்லாம் 70, 75 வயசுக்கு மேல இருக்கிற வயசான சீனியர்ஸ், எல்லாம் மிரட்டி சீட்டை வாங்கிட்டாங்க, அவங்களுக்கும், அவங்க பிள்ளைகளுக்கு சீட்டு வாங்கிட்டாங்க தொடர்ந்து இருந்த தலைவர்களுடைய பிள்ளைங்கதான் நின்னு சீட்டு வாங்கி இருக்காங்க, சாமானியர்களுக்கு எங்க இடம் இருக்கு? தமிழ்நாட்டிலேயே ஜோதிமணி ஒன்றுதான் லேடி கோட்டாவில் சீட், சாமானிலிருந்து வந்த பெண் ஒன்னே ஒன்னு தான், அவங்க சொன்ன 33%  அட்லீஸ்ட் மூன்றாவது இருக்க வேண்டாமா? இங்க இருக்கிற சீனியர்கள் எல்லாம் சேர்ந்து அதையும் கிடைக்க விடாமல் பண்ணிட்டாங்க,  ஏன் சிட்டிங் எம்எல்ஏ எங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் வசந்தகுமார் மிரட்டி வாங்கிருக்காரு, ஏன் சிட்டிங் எம்எல்ஏ லேடி எனக்கு கொடுத்தால் என்ன? என்னை நிறுத்திக்கலாம் இல்ல? என்னோட சொந்த மாவட்டம் தானே?  

72 வயசு சீனியர், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வந்து, மிரட்டி வாங்கிட்டு போறாரு இதுல சீனியர்களிடம் தொந்தரவு இல்லையா? இந்த விஷயத்தில் இங்கேயும், அங்கேயும்  அதேதான் பிரச்சினை, சீனியர்கள் எல்லாம் உட்கார்ந்துகொண்டு ஒன்னு தனக்கு வேணும், இல்ல தன் வாரிசுகளுக்கு வேண்டும் என்று ரொம்ப தெளிவா இருக்காங்க. எல்லாம் ராகுல்ஜி சொன்னது 100க்கு நூறு உண்மை, அவரு இன்னைக்கு ரிசைன் பண்ணனும்ன்னு சொன்னது, இந்த தொந்தரவுக்கு தான், அவருக்கு இந்தியா முழுவதும் இருக்கிறது. அந்தக் கோவத்தை தான் அவர் இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார். ரஜினிகாந்த் என்ன சொல்றாருன்னா? ராகுல்காந்தி எல்லாத்தையும் சரி பண்ணி விட்டு இந்த காங்கிரஸ் கட்சிக்கு அவர் தலைவராக நீடிக்கணும்ன்னு சொல்லியிருக்கிறார். இதில் எந்த தப்புமே இல்லையே... இது ரஜினிகாந்த் சொல்வதுமட்டுமல்ல,   நாங்களும் அதே விமர்சனத்தைத்தான் முன் வைக்கிறோம் என ஆவேசமாக பேசியுள்ளார் விஜயதாரணி.