Asianet News TamilAsianet News Tamil

ரொம்ப ஓவரா போற... வேற மாதிரி ஆகிடும்... விஜய பிரபாகரனை எச்சரிக்கும் அமமுகவினர்...!

அமமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை எங்களுடன்தான் அவர்கள் கூட்டணி வைத்துள்ளார்கள் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

vijaya prabhakaran controversy speech...ammk warning
Author
Thoothukudi, First Published Mar 25, 2021, 1:17 PM IST

அமமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை எங்களுடன்தான் அவர்கள் கூட்டணி வைத்துள்ளார்கள் என விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தேமுதிக இந்த தேர்தலிலும் கூட்டணியை தொடர முயற்சித்தது. ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் 40 இடங்கள் கேட்ட நிலையில் அதிமுக வெறும் 13 இடங்களே கொடுக்க முன் வந்தது. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. 

vijaya prabhakaran controversy speech...ammk warning

பின்னர், திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடித்து விட்டது என்பதால் அங்கும் செல்ல முடியவில்லை. கமல்ஹாசன் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. இதனையடுத்து கடைசியாக வேறு வழியில்லாமல் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து. அமமுக தரப்பில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

vijaya prabhakaran controversy speech...ammk warning

இந்நிலையில், தற்போது அமமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் விஜயபிரபாகரன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் நேற்று பேசிய விஜயபிரபாகரன்;- தேமுதிக தமிழகத்தில் மிகவும் வலிமையாக இருக்கிறது. இந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனது வலிமையை நிரூபிக்கும். நாங்கள் யாரிடமும் கூட்டணி வேண்டும் என்று போய் நிற்கவில்லை. அமமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறவில்லை. மாறாக தேமுதிக கூட்டணியில்தான் அமமுக இடம்பெற்றுள்ளது என்றார். 

vijaya prabhakaran controversy speech...ammk warning

இவரது பேச்சு அமமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இடம் கிடைக்கவில்லை என்று அவர்கள்தான் அமமுகவினருக்கு வந்தனர். கூட்டணியில் எங்களை விட குறைந்த இடங்களில்தான் அவர்கள் போட்டியிடுகிறார்கள். அப்படி இருக்கும் போது நாங்கள்தான் கூட்டணியின் தலைமை என்பது போல இவர் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios