Asianet News TamilAsianet News Tamil

ரெய்டே வராத வாத்தி... ’மாஸ்டர்’ இல்லாமலே பள்ளியில் கோடிகளை குவித்த விஜயின் ஞானத்தந்தை பிரிட்டோ..!

என்னாங்கடா இது மாஸ்டர் படம் ரிலீசாகப்போகிறது. எந்த பிரச்சினையும் வரலையே எனப்பார்த்தேன். பிரிட்டோ நடத்துகிற பள்ளிக்கூடத்தில் கிளம்பி விட்டது என பலரும் கிண்டலடிக்கிறார்கள். 

Vijay s wise father Brito who amassed crores in school without Master
Author
Tamil Nadu, First Published Dec 22, 2020, 4:42 PM IST

என்னாங்கடா இது மாஸ்டர் படம் ரிலீசாகப்போகிறது. எந்த பிரச்சினையும் வரலையே எனப்பார்த்தேன். பிரிட்டோ நடத்துகிற பள்ளிக்கூடத்தில் கிளம்பி விட்டது என பலரும் கிண்டலடிக்கிறார்கள். பள்ளி கூடமே திறக்காத நிலையில் L.K.G மாணவ மாணவியினர்களின்  பெற்றோர்களிடம் சிறப்பு  கட்டணமாக 67,000 ரூபாய் மற்றும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்த மாஸ்டர்  படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கு கட்டணங்கள் வசூலித்ததால் நாலாபுறத்தில் இருந்தும் கண்டனங்கள் குவிகின்றன.

 Vijay s wise father Brito who amassed crores in school without Master

செந்தூரப்பாண்டியில் இருந்து மாஸ்டர் வரைக்கும் தொட்டுத் தொடருகிறது விஜய் - சேவியர் பிரிட்டோ உறவு. பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தை எஸ்.ஏ.சியோடு அவ்வப்போது முரண்பட்டு வந்த நடிகர் விஜய், அண்மையில் தந்தையை ஒதுக்கியே வைத்துவிட்டார். ஆனால், விஜய்யின் ஞானப் பெற்றோராக மத ரீதியாக வரித்துக்கொண்ட பிரிட்டோவுடன் இன்னமும் உறவிலும் நட்பிலுமாக இருக்கிறார். பிரிட்டோவை, ‘அங்கிள்’ என்றே அழைப்பார் விஜய். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினர், எஸ்.ஏ.சியின் தங்கையின் கணவர்தான் பிரிட்டோ.

பொதுவாக ஞானத்தந்தை அந்தஸ்துக்கு உறவினர்களில் நல்ல நிலையில் இருப்பவரைதான் பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித்தான் எஸ்.ஏ.சியும் தன் மகன் விஜய்க்கான ஞானத்தந்தையாக பிரிட்டோவைத் தேர்ந்தெடுத்தார். 1990களிலேயே விஜய்யின் செந்தூரப்பாண்டி, ரசிகன் படங்களைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ ஒரு பரபரப்பான பிசினஸ் காந்தம். 1984 முதல் இன்டெவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். இன்னமும் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டிருப்பவர்.Vijay s wise father Brito who amassed crores in school without Master

எந்த அளவு பிசினஸ் காந்தம் என்றால் இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் விமான சரக்கு நிலையம் அமைக்கும் அளவுக்கு பெரும் தனக்காரர் பிரிட்டோ. சென்னை விமான நிலையத்தில் சரக்குப் போக்குவரத்து நெரிசலால், பல முக்கிய நிறுவனங்கள் தங்கள் சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஹைதராபாத், பெங்களூரு சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் லாஜிஸ்டிக் நிறுவனம் நடத்திக்கொண்டிருந்த சேவியர் பிரிட்டோ இந்த சூழலைப் பயன்படுத்தி சென்னையிலேயே தனியார் விமான சரக்கு நிலையத்தைத் தொடங்கினார். தற்போது வரை பல்லாயிரகணக்கான கோடிகளில் புரள்கிறார் சேவியர் பிரிட்டோ.

சென்னையில் வேள்சேரியில் சேவியர் பிரிட்டோவுக்கு சொந்தமான பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்த விவகராம் தாறுமாறாக கிளம்பி உள்ளது.  பள்ளி கூடமே திறக்காத நிலையில் L.K.G மாணவ மாணவியினர்களின்  பெற்றோர்களிடம் சிறப்பு  கட்டணமாக 67,000 ரூபாய் மற்றும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளார் மாஸ்டர்  படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. Vijay s wise father Brito who amassed crores in school without Master

இந்த பிரிட்டோ ஒன்றும் சாதாரண  பணக்காரர் அல்ல. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கெரி இண்டேவ் என்கிற சர்வதேச அளவில் கப்பல் மற்றும் சரக்கு முனையங்களையும், ஈ.சி.ஆர் ரோட்டில் 85 தனி சொகுசு வில்லாக்களை கொண்ட எஸ்தல் ஓட்டல் நிறுவனத்தில் இயக்குநர்.  இவரது பள்ளிக்கு மாஸ்டர்கள் வந்து வகுப்பெடுக்காத நிலையில் பொங்கலுக்கு இவர் தயாரித்த மாஸ்டர் படம் 1000 திரையரங்குகளில் வெளியாகி வசூலிக்கப்போகிறது. பள்ளியில் மாஸ்டர்கள் இல்லாமல் வசூலிக்கும் பிரிட்டோ, ஆயிரம் தியேட்டர்களில் விஜய் என்னும் ஒற்றை மாஸ்டரை இறக்கி பல கோடிகளை வசூலிக்க இருக்கிறார். விஜய் ரசிகர்கள் பொறுத்தருள்க... ஏனென்றால் பிரிட்டோ விஜயின் ஞானத் தந்தை ஆயிற்றே..!

Follow Us:
Download App:
  • android
  • ios