Asianet News TamilAsianet News Tamil

கெத்துவிடாத இளைய தளபதி விஜய்.. அபராதத்தை எதிர்த்து, தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி ஏற்கனவே பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தான், தானும் நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

 

Vijay case Hearing, Case against a fine imposed in a case seeking cancellation of entry tax on luxury car imports.
Author
Chennai, First Published Jul 27, 2021, 7:57 AM IST

சொகுசு கார் இறக்குமதிக்கான  நுழைவு வரியை ரத்து செய்ய கோரிய வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து, நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு இன்று (27.07.2021) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது. நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. 

Vijay case Hearing, Case against a fine imposed in a case seeking cancellation of entry tax on luxury car imports.

இதையடுத்து,  காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை  விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்தார். மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதை முதலமைச்சர் கொரோனா  நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். 

Vijay case Hearing, Case against a fine imposed in a case seeking cancellation of entry tax on luxury car imports.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி ஏற்கனவே பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தான், தானும் நுழைவு வரிக்கு விலக்களிக்க கோரியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது அதே போல, அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் 7வது வழக்காக விசாரனைக்கு பட்டியலிடபட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios