நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம் என்றும் யார் வேண்டுமானல் கட்சி தொடங்கலாம் என்று பாஜக தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் குறித்து பாஜக இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் . கீழடி அகழாய்வை மத்திய அரசை முறையாக மேற்கொண்டு வருகிறது எனவும் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் அடுத்த லட்சுமிபுரத்தில் 370வது சட்டப்பிரிவு நீக்கம் குறித்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற பின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் குறித்து பாஜக இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறினார். கீழடி அகழாய்வை மத்திய அரசு முறையாக செய்து வருவதாகவும், மறைக்கப்பட்ட உண்மைகள் வெளி வருவதாக தமிழ் ஆர்வலர்களே மத்திய அரசை பாராட்டி வருகிறார்கள் எனவும் கூறினார்.

 

உட்கட்சி பூசல் காரணமாக தமிழக பாஜக தலைவர் நியமனம் தாமதம் என்ற செய்தியாளர் கேள்விக்கு தமிழக பாஜகவில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஹிந்தி மொழி குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு விளக்கமளிக்கப்பட்டு போராட்டம் அறிவித்தவர்களே அதனை வாபஸ் பெற்று விட்டாதால் ஹிந்தி திணிப்பு என்ற கேள்வியே தவிர்க்க வேண்டும் என கூறினார். இடைத்தேர்தலில் போட்டியில்லை என்ற கமல் அறிவிப்புக்கு ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு என்றும், நடிகர் விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் தமிழகத்தில் மேலும் கட்சிகள் தொடங்கலாம எனவும் கருத்து தெரிவித்தார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் மத்திய அரசு விவசாயிகளின் பயிர்கடன்களை ரத்து செய்யுமா என்ற கேள்விக்கு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ6000 உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார். 

 

புதிய மோட்டார் வாகன சட்டம் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவே அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். முன்னதாக நிகழ்வில் கலந்து கொள்ள பொன்.ராதாகிருஷ்ணன் வந்த போது பட்டாசு வெடித்ததில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டு இருசக்கர வானகம் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பாதுகாப்புக்காக வந்திருந்த காவலர்கள் இரு சக்கர வாகனத்தின் மீது மணலை கொட்டி அணைத்தனர். இதில் இருவர் காயமடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.