Asianet News TamilAsianet News Tamil

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் யார்? எதிர்கட்சிகள் இன்று முடிவு…

vice president election candidate for opp.party
vice president election candidate for opp.party
Author
First Published Jul 11, 2017, 7:23 AM IST


குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் யாரை வேட்பாளரை தேர்வு செய்வதுஎன்பது  குறித்து காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன.

குடியரசு துணைத் தலைவராக ஹமீத் அன்சாரி தற்போது பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அப்பதவிக்கான வேட்பாளர்கள்  யார் யார் ? என்பதை இது வரை பாஜகவோ, காங்கிரஸ் கட்சியோ அறிவிக்கவில்லை.

vice president election candidate for opp.party

இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து முடிவு செய்ய டெல்லியில் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் கலந்து மாட்டார் என்று அக்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

.இக்கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அக்கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட வேண்டிய வேட்பாளர் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட இருக்கிறது.

vice president election candidate for opp.party

இந்நிலையில், பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் கூட்டம் இன்று  நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் அனைத்து சட்டப் பேரவை உறுப்பினர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இதில் நிதீஷ் குமாரும் கலந்து கொள்ள இருக்கிறார்.

vice president election candidate for opp.party

 ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவுக்கு எதிராக சிபிஐ
ஊழல் வழக்குப்பதிவு செய்திருப்பதை சுட்டிக்காட்டி, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், டெல்லியில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios