ஆட்சிக்கு ஆபத்து என்பதால் தான் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை குறைக்க அதிமுக அரசு முயற்சி செய்வதாக டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய அதிமுக சட்டமன்றக் கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு சிபாரிசு செய்துள்ளார். 

இந்நிக்லையில், சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த வெற்றிவேல், ’ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேரும் அதிமுகவில்தான் இருக்கிறார்கள். ஆனால், எங்களின் நண்பர்களாக உள்ளார்கள். 

மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது மட்டும் நடவடிக்கை என்றால் தமிமுன் அன்சாரி, கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை சட்டப்படி தகுதிநீக்கம் செய்ய முடியாது. அவ்வாறு நீக்கினால் நீதிமன்றம் செல்லாமல் தேர்தலை சந்திக்க தயார். எங்களின் ஸ்லீப்பர் செல்களாக அதிமுகவில் தற்போதும் பலர் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.