இன்று நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக அணி சார்பில் போட்டியிட்ட வெங்கய்யா நாயுடு பெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கோபால கிருஷ்ண காந்தியை விட 272 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10 ஆம் தேதியிடன் முடிவடைகிறது. இதையடுத்த அப்பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

பாஜக சார்பில் வெங்கய்யா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.

இன்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 785 ஓட்டுகளில் 771 ஓட்டுகள் பதிவாகின. பாஜக எம்பிக்கள்  -2, காங்கிரஸ் எம்பிக்கள் -2 ஐ.எம்.யூ.எல் கட்சியின் -2,எம்.பிக்கள் மற்றும் திரிணமுல் காங்கிரஸின் 4 எம்.பிக்கள் , தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி ., பி.எம்.கே கட்சியின் ஒரு எம்.பி மற்றும் 2 சுயேட்சை எம்.பிக்கள் உட்பட 14 எம்.பிக்கள் ஓட்டளிக்கவில்லை.

இந்த வாக்குகள் மாலை  7 மணிக்கு எண்ணப்பட்டன. இதில்  516 வாக்குகள் பெற்று வெங்கய்யா நாயுடு வெற்றி பெற்றார். கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குள் பெற்று தோல்வி அடைந்தார்.