ஆ.ராசாவை கைவிட்ட திமுக.!ஆதரவாக சீமானை தொடர்ந்து களத்தில் இறங்கிய வேல்முருகன்.. இந்து அமைப்புகளுக்கு எச்சரிக்கை
ஆ.ராசா குறித்து அநாகரீகமாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் தொடர்ந்து "காவி சங்கி" கும்பல்கள் பேசி வருவது ஏற்புடையதல்ல, சங்கி கும்பல்களின் அவதூறு பிரச்சாரம் தொடருமானால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஆ ராசா பேச்சுக்கு எதிர்ப்பு
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா இந்துக்களை விமர்சித்து கருத்து தெரிவித்ததாக கடந்த சில நாட்களாக வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியானது அந்த வீடியோவில் , ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்ற கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என பேசியது போல் காட்சி வெளியானது. இதற்கு அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆ.ராசா மீது காவல்நிலையத்திலும் புகாரும் அளிக்கப்பட்டிருந்தது.
ஆதரவு தெரிவித்த சீமான்
திமுகவோ, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கருத்திற்கு எதிராக எந்த பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி கேட்டதற்கு காதில் கேட்கவில்லை என்று செய்கை காட்டி சென்றிருந்தார். இது போல திமுகவினர் யாரும் ஆராசாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆ ராசாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் மதம்தான் மண்ணின் மக்களின் பிறப்பைக் கொச்சைப்படுத்தி உரைக்கிறதே ஒழிய, அண்ணன் ஆ.ராசா அவர்கள் எவரது பிறப்பு குறித்தும் இழிவாகப் பேசவில்லை. இதனையே அவருக்கு முன்பாக தமிழின முன்னோர்களும், ஐயா பெரியார் போன்ற சமூகச்சீர்திருத்தவாதிகளும் பலமுறைப் பேசியிருக்கிறார்கள் என்பது வரலாறு. ஆ.ராசா அரசியல் இயக்கத்தாலும், கொள்கை நிலைப்பாட்டாலும் மாறுபட்டாலும், அவர் இம்மண்ணின் மகன்; தமிழகத்தின் மிக முக்கியமானக் கருத்தாளுமை! மதவாதிகள் அவரை நோக்கி இழிசொற்களை வீசுவதை அனுமதிக்கவோ, அவரை விட்டுக்கொடுக்கவோ முடியாது.
திமுக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் அறிவிப்பு..! மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை பிரித்தும் உத்தரவு
இந்து மதத்தை புண்படுத்தவில்லை
ஆ.ராசாவுக்கு எதிரான அவதூறுப் பரப்புரைகளுக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்புணர்வையும் பதிவு செய்கிறேன். ஆகவே, ஆரிய சனாதன கோட்பாடுகளுக்கு எதிரான அண்ணன் ஆ.ராசா அவர்களின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து, என்றைக்கும் துணைநிற்போம் என்பதையும் நாம் தமிழர் கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக வின் துணைப் பொதுச் செயலாளர் மக்களவை உறுப்பினருமான திரு.ஆ.ராசா. அவர்கள் "மனு ஸ்மிருதியில்" குறிப்பிடப்பட்டுள்ளதைத்தான் எளிய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறினாரே தவிர இந்து மக்களையோ,இந்து மதத்தையோ புண்படுத்தும் வகையில் பேசவில்லை.
என்னம்மா கண்ணு செளக்கியமா; ஆமாம்மா கண்ணு செளக்கியம் தான்... தனது ஸ்டைலில் பெரியாரை புழந்த சத்யராஜ்!!
பதிலடி கொடுக்கப்படும்
திரு.ஆ.ராசா.அவர்கள் குறித்து அநாகரீகமாகவும் அவதூறு பரப்பும் வகையிலும் தொடர்ந்து "காவி சங்கி" கும்பல்கள் பேசி வருவது ஏற்புடையதல்ல கடுமையான கண்டனத்திற்குரியதாகும் திரு.ஆ.ராசா. அவர்கள் குறித்த சங்கி கும்பல்களின் அவதூறு பிரச்சாரம் தொடருமானால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என வேல்முருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு விவகாரம்... ஆ.ராசாவுக்கு சப்போர்ட் பண்ணும் சீமான்!!