Asianet News TamilAsianet News Tamil

ரசிகர்களின் காசு உங்களுக்கு வேணும்... நேரில் பார்க்க வந்தால் தொந்தரவா..? ரஜினியை விளாசி தள்ளிய வேல்முருகன்!

"தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்கள்தான் ரஜினியின் படம் வெளியாகும்போது 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை டிக்கெட்டை விலைக்கு வாங்கி பாலபிஷேகம் செய்து படத்தைப் பார்க்கிறார்கள். ரசிகர்கள் மூலம் கிடைக்கும் பணம் மட்டும் தனக்கு வேண்டும். ஆனால், வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது ரசிகர்கள் கூடினால் தொந்தரவாகிவிடும் எனக் கூறுவது ரசிகர்களை அவமதிக்கும் செயல்” என வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Velmurugan attacked Rajinikanth on tuticorin firing issue
Author
Chennai, First Published Feb 24, 2020, 10:20 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ரசிகர்களைக் காரணம் காட்டி ரஜினி விதிவிலக்குக் கோருவது அபத்தமானது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.Velmurugan attacked Rajinikanth on tuticorin firing issue
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையம் முன்பு ஆஜராகும்படி நடிகர் ரஜினிக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. இந்நிலையில் விசாரணை ஆணையத்திலிருந்து ஆஜராக விலக்கம் அளிக்கக்கோரி நடிகர் ரஜினி மனு அளித்திருந்தார். அதில், “விசாரணைக்கு நேரில் ஆஜரானால் ரசிகர்கள் கூடுவார்கள். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்’ என்பதையும் ரஜினி சுட்டிக்காட்டியிருந்தார். ரஜினியின் இந்தப் பதிலுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்,

Velmurugan attacked Rajinikanth on tuticorin firing issue
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வேல்முருகன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ரஜினியை விமர்சனம் செய்தார். “நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியை ஆதரிக்கும்.Velmurugan attacked Rajinikanth on tuticorin firing issue
 தமிழகத்தில் அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும். ஆனால், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு எழுதினால் நியாயமான முறையில் அரசு வேலை கிடைக்குமா என்ற அச்சமும் சந்தேகமும் நிலவுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ரசிகர்களைக் காரணம் காட்டி ரஜினி விதிவிலக்குக் கோருவது அபத்தமானது. நான் வந்தால் ரசிகர்கள் கூடிவிடுவார்கள் எனச் சொல்லி பின்வாங்குவது ஏற்புடையது அல்ல.Velmurugan attacked Rajinikanth on tuticorin firing issue 
தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்கள்தான் ரஜினியின் படம் வெளியாகும்போது 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை டிக்கெட்டை விலைக்கு வாங்கி பாலபிஷேகம் செய்து படத்தைப் பார்க்கிறார்கள். ரசிகர்கள் மூலம் கிடைக்கும் பணம் மட்டும் தனக்கு வேண்டும். ஆனால், வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது ரசிகர்கள் கூடினால் தொந்தரவாகிவிடும் எனக் கூறுவது ரசிகர்களை அவமதிக்கும் செயல்” என வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios