பணப்பட்டுவாடா இல்லாமல் தேர்தல் நடந்தால் மக்கள் எங்களுக்குதான் வாக்களித்திருப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அதில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகத்தைவிட சுமார் 8,141 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்து நிலையில் மதுரையில் விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்த நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்வதும் ஏற்றுகொள்ளாததும் அவர்களின் பிரச்சனை. 

ஆனால், நாம் தமிழர் கட்சி தொடர்ந்து களத்தில் நிற்கும் என்று கூறினார். பணபட்டுவாடா செய்யாமல் தேர்தல் நடக்கும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சிக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் சீமான் தெரிவித்தார். மக்கள் எங்களுக்கு வாக்களிக்கும் சூழல் உருவாகும் என்றும் அப்போது அவர் கூறினார்.

 

அமமுக, மக்கள் நீதி மய்யம், போன்ற கட்சிகள் கூட வேலூர் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த நிலையில் அதிமுக, திமுக என்ற இரண்டு இராட்சத பலம் கொண்ட கட்சிகளை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார்  26,995 வாக்குகள் பெற்று தன் பலத்தை நிரூபித்துள்ளது, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் நாம்தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் 2.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.