வேலூர் மக்களவை தொகுதி 2-வது சுற்று முடிவில் 2,667 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார். தற்போது அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 57,511 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 54,844 வாக்குகள் பெற்றுள்ளார். 

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர்ஆனந்த் மற்றும் , நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என மொத்தம் 28 பேர் போட்டியிட்டனர். மொத்தம், 71.51 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், முதல் சுற்றில் அதிமுகவின் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து இரண்டாவது சுற்றில் 34,052 வாக்குகள் பெற்று 1541 வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்து வந்தார். தற்போது 2-வது சுற்று முடிவில் ஏ.சி.சண்முகம்  2,667 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். தற்போது அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 57,511 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 54,844 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் 1,058 வாக்குகள்  பெற்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.