வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.கண்முகம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆன்ந்த போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சியின் சார்பில்  தீபலட்சுமி களத்தில் உள்ளார்.

இந்நிலையில் அதிமுகவில் கடந்த சில நாட்களாக கரன்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக கூறப்படுகிறது. அதிமுக அமைச்சர்கள்  ஒவ்வொருவரும்  தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியிகளில் தாராளமாக நிர்வாகிகளுக்கு பணம் செலவழிக்கிறார்கள். 

அதனால் அதிமுக நிர்வாகிகள் தெம்பாகியிருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு, எப்போது செய்ய வேண்டும், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதையும் அதிமுகவில் மிகமிக பக்காவாக திட்டமிட்டு செய்கிறார்கள் என கூறப்படுகிறது.

கடந்த முறை பணப் பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்ட தொகுதி என்பதால் வேலூரில் இம்முறை தேர்தல் ஆணையத்தின் கவனம் இரு மடங்கு கூர்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேலூரில் தேர்தல் ஆணையம் இருக்கிறதா ?  இல்லையா ?  என தேடும்நிலைக்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில் வேலூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அதிமுக ஒரு ஓட்டுக்கு 300 ரூபாயும், திமுக 200 ரூபாயும் விநியோகம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேலூர் தொகுதியின் தற்போதைய ரேட் இது தான் என்றாலும் தேர்தல் நெருங்க நெருங்க இந்த ரேட் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.