வேலம்மாள் பாட்டி முதல்வரிடம் சொன்ன ஒற்றை வார்த்தை...! கன்னியாகுமரியில் நெகிழ்ச்சி...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 90வயது வேலம்மாள் பாட்டியை சந்தித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது

Velammal Grandmother said a single word to the stalin

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வந்தனர். இந்தநிலையில்  தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு கொரோனா உதவி தொகை வங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு  தான் சொன்னபடி கொரோனா நிவாரண தொகை ரூ.4000 வழங்கப்படும் என  அறிவித்தார். அதன்படி 4 ஆயிரம் ரூபாய் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. இரண்டு தவனையாக வழங்கப்பட்ட நிவாரண உதவியை பெற்ற ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Velammal Grandmother said a single word to the stalin


இதே போலத்தான் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த   பாட்டி வேலம்மாள், தமிழக அரசு வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் பணத்தை நியாயவிலைக்டையில் பெற்றார். அப்போது அங்கிருந்த புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி அந்த பாட்டியின் சிரிப்பை தனது கேமரா மூலம் பதிவு செய்தார். கையில் ரூ. 2000 பெற்ற மகிழ்ச்சியில் தனது பொக்கைவாய் சிரிப்பு தமிழகம் முழுவதும் வைரலானது. பெரும்பாலான மக்கள் தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக அந்த படத்தை பதிவேற்றம் செய்தனர். இதனால் ஒரே நாளில் டிரென்ட் ஆனார் வேலம்மாள் பாட்டி. இதனையடுத்து அந்த புகைப்படத்தை எடுத்த ஜாக்சன் ஹெர்பியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைசெயலகத்திற்கு அழைத்து பாராட்டினார். இந்தநிலையில் இரண்டு நாள் சுற்றுபயணமாக தூத்துகுடி. கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு திட்டங்களையும்  துவக்கியும் வைத்தார்.

Velammal Grandmother said a single word to the stalin


நேற்று கன்னியாகுமரி சென்றிருந்த முதல்வர் நாகர்கோவில் பகுதிக்கு சென்ற போது வேலம்மாள் பாட்டியை பார்க்க விருப்பப்பட்டார். இதனையடுத்து அந்த பாட்டியின் சொந்த ஊரான  நாகர்கோவில் கீழகலுங்கடிப்பகுதிக்கு சென்று காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் வேலம்மாள் பாட்டியை  அழைத்து வந்தனர். இதனையடுத்து அந்த பாட்டியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார். அப்போது வேலம்மாள் பாட்டி தனக்கு முதியோர் உதவி தொகை கிடைக்காமல் இருந்ததாகவும் தற்போது முதியோர் உதவி தொகை வழங்கி உதவி செய்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த காட்சி காண்போரை உணர்ச்சிவசப்படுத்தியது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios