முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பரவாத கொரோனா தொற்று வேல் யாத்திரையால் பரவுமா? என்று எச்.ராஜா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பாஜக சார்பில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல்யாத்திரை நடைபெறும் என எல்.முருகன் அறிவிந்திருந்தார். ஆனால், இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி யாத்திரை நடத்துபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். முன்னதாக திருத்தணியிலும், திருவொற்றியிலும் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா;- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் பங்கேற்ற கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் கூட்டத்தில் பரவாத கொரோனா நோய் தொற்று வேல் யாத்திரை நடத்தினால் பரவி விடுமா? எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தே வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்தது என எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.