சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ராஜாவை அந்தப் பதவியில் இருந்து மாற்றி தேர்தல் பிரிவு செயலாளர் என்ற மாநிலப் பதவிக்கு மு.க.ஸ்டாலின்  நியமித்திருக்கிறார். ஆனால், பெயரளவுக்கான இந்த பதவி உயர்வில் வீரபாண்டி ராஜாவின் சேலம் அதிகார மையம் முற்றிலும் பறிக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது. 

இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நேற்று தனது முகநூல் பக்கத்தில்;- கடந்த நவம்பர் 18-ம் தேதி தான் ஈட்ட பதிவை மீண்டும் பதிவு செய்திருக்கிறார். இது சேலம் மாவட்ட அரசியலில் மட்டுமல்லாது தமிழ்நாட்டு அரசியலிலும் சலசலப்புகளை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- ஆபரேசன் உதயநிதி..! நடுக்கத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள்..! வீரபாண்டி ராஜா பதவி பறிப்பின் பின்னணி..!

சண்டையிட்டு வென்ற வீரபாண்டியார்"

1978-ஆம் ஆண்டில் சட்ட மேலவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் வீரபாண்டியாரின் பெயர் இல்லை. கலைஞரை அவர் நேரில் சந்தித்து முறையிட்டாராம். அப்போது, ஏதேதோ கூறிய கலைஞர், இப்போது முடியாது; அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என்று கூறி விட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த வீரபாண்டியார், கலைஞரிடம் கடுமையாக சண்டையிட்டாராம்; அதன்பிறகு தான் கலைஞர் வீரபாண்டியாருக்கும் வேண்டா வெறுப்பாக வாய்ப்பளித்தாராம். தமது அரசியல் எதிர்காலத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகத் தான் கலைஞர் அவ்வாறெல்லாம் செய்தார் என்பது வீரபாண்டியாரின் வருத்தம் ஆகும்.

வேறு சில தருணங்களிலும் கலைஞர் தம்மை கைவிட்டதாக வீரபாண்டியாருக்கு வருத்தம் உண்டு. அந்த வருத்தங்களையெல்லாம் தமது வாழ்க்கை வரலாற்று நூலின் ஓர் அத்தியாயமாக பதிவு செய்திருந்தார் வீரபாண்டியார். இந்த தகவல்களை ஒரு கட்டத்தில் என்னிடமும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார். வீரபாண்டியார் உயிருடன் இருந்து அவரது வாழ்க்கை வரலாற்று நூலை இடம் வெளியிட்டு இருந்தால், இந்த விஷயம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும். ஆனால், இப்போது இந்த தகவல்கள் அடங்கிய அத்தியாயமே புத்தகத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்டத்தின் தமக்கு கீழ் பணி செய்த ஒருவர் துரோகம் செய்ததால் அவரை வீரபாண்டியார் விரட்டியடித்துள்ளார். அப்படிப்பட்டவரையே தமக்கு எதிராக சேலம் மாவட்டத்தில் அரசியல் செய்ய வைத்து ஸ்டாலின் அவமதித்தார் என்ற தமது வருத்தத்தையும் அந்த நூலில் வீரபாண்டியார் விரிவாக குறிப்பிட்டிருந்தார். அந்த பகுதியும் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் நூலில் இல்லை.

2012-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை குறித்தும் வாழ்க்கை வரலாற்று நூலில் வீரபாண்டியார் விரிவாக பதிவு செய்திருந்தார். இதுகுறித்த விவரங்களையும் ஒரு தருணத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆனால், இந்த விவரங்களும் வீரபாண்டியாரின் நூலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் அந்தப் பதிவை எடுத்து நேற்று வெளியிட்டிருக்கிறார் ராமதாஸ். இதன் மூலம், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மு.க.ஸ்டாலின் இழைத்த அநீதிகளை நினைவுபடுத்தி அதன் தொடர்ச்சியாகவே அவரது மகன் ராஜாவுக்கும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ராஜாவை பாமக பக்கம் இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.