கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வு ரத்து  என்று நேற்று மாநிலங் களவையில் அறிவிக்கப்பட்டது மட்டு மல்லாமல், தமிழ் உள்பட மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை வரவேற் கிறோம் - பாராட்டுகிறோம் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்தது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் 1000 பணியாளர் இடங்களுக்கான தேர்வை தமிழில் எழுதக்கூடாது; இந்தியிலும், ஆங்கிலத்திலும்தான் எழுதவேண்டும் என்று தேர்வுக்கு முதல் நாள் திடீரென்று மத்திய அரசு அறிவித்தது - கடும் அதிர்ச் சியை அளித்தது; தேர்வு எழுத இருந்த வர்கள் உள ரீதியாக உளைச்சலுக்கு ஆளானார்கள். திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட் டோம். தேர்வை ரத்து செய்யவேண்டும் அல்லது ஒத்தி வைக்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் (13.7.2019) வெளி யிட்டும் இருந்தோம்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.,க் கள் கட்சிகளை மறந்து எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தோம். அதேபோல, நேற்று (16.7.2019) நாடாளுமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் (15.7.2019) தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இதுகுறித்து தி.மு.க. பிரச்சினையைக் கிளப்பியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கண்டித் துத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்காத நிலையில், தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

இந்த எதிர்ப்புகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசைப் பணிய வைத்ததன் விளைவாக நேற்று பிற்பகல் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தமிழ் உள்பட மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை வரவேற் கிறோம் - பாராட்டுகிறோம்.

37 பேர் நாடாளுமன்றத்திற்குள் சென்றால் என்ன சாதிக்க முடியும் என்று கேட்டவர்களுக்கு இதுதான் சரியான பொருத்தமான பதிலாகும்.மாநில உணர்வுகளையும், உரிமைகளையும், மொழிகளையும் மதிக்கும் போக்கு இந்தப் புள்ளியிலிருந்தாவது மத்திய அரசு தொடங்கவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் அழுத்தமான நிலைப்பாடு! என வீரமணி கூறியுள்ளார்.