பாஜக மோடியின் எதர்ச்சியதிகார போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் விரைவில் பேரணி... திருமாவளவன் தகவல்!!
திமுக மீது அண்ணாமலை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு வைத்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக மீது அண்ணாமலை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு வைத்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் வருகிற ஏப்ரல் 05 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு விசிக ஆதரவு வழங்கும்.
இதையும் படிங்க: சனாதான தர்மத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்... ஹெச். ராஜா அதிரடி!!
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி பாஜக மோடியின் எதர்ச்சியதிகார போக்கை கண்டித்தும் ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்தும் ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்த இருக்கிறோம். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானியை பாதுகாப்பதற்காக ஆளும் கட்சியினரே தொடர்ந்து கூச்சல் எழுப்பி இரு அவைகளையும் முடக்கி வைத்துள்ளனர். நாடாளுமன்ற அவைக்குள்ளே அதானின் பங்குச்சந்தை ஊழலை விசாரிக்க வேண்டும்.
இதையும் படிங்க: அண்ணாமலையின் பேச்சு எங்களுக்கு வேத வாக்கு அல்ல... செல்லூர் ராஜூ பரபரப்பு கருத்து!!
ஆளும் கட்சிக்கு எதிராக பேசினால் நாங்கள் தான் எதிர்க்கட்சி என்ற முனைப்புடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு வைத்து வருகிறார். ஆனால் தற்பொழுது அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை தன்வசம் இழுக்க அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை கைப்பற்றி வருகிறார். இதனால் அண்ணாமலை பதவிக்கு ஆபத்து வரும் என்று தெரிவித்துள்ளார்.