விசி கட்சி ஆட்கள் நடத்தும் கொடூரமான ரவுடி அரசியலுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. தலித்அரசியல் என்ற போர்வையில் இவர்கள் தான் பட்டியலின மக்களுக்கு எதிராக சமூகத்தில் ஒரு ஒற்றுமையின்மையை, வெறுப்பை உருவாக்க போகிறார்கள் எனக் கூறி மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

 

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் கலைஞர் பாதை பத்திரிகை ஆசிரியர் குணசேகரன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த குண்டர்களால் முத்துக்கடை பகுதியில் நடுரோட்டில் வைத்து  அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனாதன கல்வியை வேறருப்போம் என்று தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள் என்று இந்து மத நம்பிக்கையை கேவலப்படுத்தும் விதமாக பேசியது உலக அளவில் இந்துமத நம்பிக்கை உடையவர்களிடம் பெரும் அதிர்ச்சியையும்,கோபத்தையும் ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்துமதத்தையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் அவதூறு மற்றும் ஏளனம் செய்து பேசி வரும்  திருமாவளவன் அவர்களின் பேச்சினை கண்டிக்கும் பெருட்டு இந்து மத நம்பிக்கையாளர்கள் பல்வேறு வகையில் சமூகவலைதளம் மூலம் எதிர்ப்பு பதிவுகள்,மற்றும் காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இராணிப்பேட்டையை சேர்ந்த கலைஞர் பாதை பத்திரிகை நிறுவனர் மற்றும் ஆசிரியருமான குணசேகரன் என்பவர் முகநூலில் தொல்.திருமாவளவனை பற்றி பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.

இந்த பதிவால் கோபம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா(எ) சார்லஸ், காரை.தமிழ், மற்றும் நிர்வாகிகள் சிலர் இராணிப்பேட்டையில் கலைஞர் பாதை பத்திரிகை ஆசிரியர் குணசேகரன் முத்துகடை பகுதியில் சென்று கொண்டு இருக்கும் போது வழிமறித்து நடுரோட்டில் வைத்து அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் கருத்துப்பதிவை கருத்துப்பதிவால் எதிர்நோக்காமல்  பத்திரிகை ஆசிரியரை நடுரோட்டில் வைத்து அடித்துள்ள விவகாரம்  பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.