நேற்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன்; திமுக, கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த, சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர். திமுக, - அதிமுக, இரு கட்சிகளிடம் பேசுவது போல, தோற்றத்தை ஏற்படுத்துவதன் வாயிலாக, தங்களின் பேரத்தை உயர்த்த முடியும் என்பதே, பாமக,வின் தந்திரம். தேவையில்லாமல், விடுதலை சிறுத்தைகளை சீண்டி, திமுக, கூட்டணியில், முரண்பாட்டை உருவாக்கலாமா என, பகல் கனவு காண்கின்றனர்; அது, பலிக்காது.

தி.மு.க.,வுடன், பாமக, உறவு வைத்துக்கொள்ள விரும்புவது உண்மை என்றால், அது, நஞ்சு கலந்த நயவஞ்சக உறவாக தான் இருக்கும். திமுக., - பாமக, கூட்டணி உருவாக வாய்ப்பு இல்லை.

பிஜேபி, - அதிமுக,வுடன், பாமக, பேச்சு நடத்துகிறது. அவர்கள் எதிர்பார்த்த அளவில், அதிமுக,வுடன் பேரம் படியாததால், அவர்களே திட்டமிட்டு, இந்த நாடக அரசியலை நடத்துகின்றனர். பாமக, - பிஜேபி இருக்கும் அணியில், நாங்கள் இடம்பெற மாட்டோம் என திருமாவளவன் கூறினார்.