Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை மறைப்பு..? பகீர் சந்தேகம் கிளப்பிய திருமாவளவன்!

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது. இந்நிலையில் எல்லா கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து தமிழக அரசு தளர்த்தி வருகிறது. இதனால் நோய் பரவல் வெகு வேகமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சொல்லும் எந்த எச்சரிக்கையையும் தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. இதனால், இன்னும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் சென்னையில் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள்: என்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

VCK President Thirumavalavan doubt about corona deaths in Tamil nadu
Author
Chennai, First Published Jun 7, 2020, 9:03 AM IST

உயிரிழப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்ற வாதத்தை மெய்ப்பிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனாவால் இறப்பவர்களையும் வேறு காரணங்களால் உயிரிழந்தார்கள் என்று சொல்லும்படி வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன என்று விசிக  தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

VCK President Thirumavalavan doubt about corona deaths in Tamil nadu

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாகவும் அதைக் குறைத்து காட்டும்படி மாவட்ட மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் வருகிற செய்திகள் உண்மைதானா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். கொரோனா பேரிடர் முழுஅடைப்பு காலத்தை மத்திய அரசும், மாநில அரசும் உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வில்லை. அதனால், உலக அளவில் இந்தியா 6-ம் இடத்துக்கு வந்துவிட்டது.VCK President Thirumavalavan doubt about corona deaths in Tamil nadu

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது. இந்நிலையில் எல்லா கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து தமிழக அரசு தளர்த்தி வருகிறது. இதனால் நோய் பரவல் வெகு வேகமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சொல்லும் எந்த எச்சரிக்கையையும் தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. இதனால், இன்னும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் சென்னையில் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள்: என்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

VCK President Thirumavalavan doubt about corona deaths in Tamil nadu
கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் சென்னையில் அரசு மருத்துவமனைகளிலேயே அனுமதிக்கப்படவில்லை என்ற புகார்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள் கொரோனா சோதனை செய்து விட்டு வந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்று நோயாளிகளைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றன. மக்களுடைய அழுத்தத்தினாலும், எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களின் காரணமாகவும் தனியார் மருத்துவமனைகளின் கட்டணம் இப்பொழுது தமிழக அரசால் வரன்முறை படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனால், தனியார் மருத்துவமனைகள் யார் அதிகம் பணம் கொடுப்பார்களோ அவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளுகிற அணுகுமுறையைக் கடைபிடித்து வருகின்றன என்று கூறப்படுகிறது.

VCK President Thirumavalavan doubt about corona deaths in Tamil nadu
கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும் அதனால் உயிரிழப்பு என்பது மிக மிகக் குறைவாக இருக்கிறது என்பதே அரசு சார்பில் சொல்லப்படும் சமாதானமாக இருக்கிறது. இதனால் மக்களும் பயத்தில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர். மேற்கொள்ள வேண்டிய எந்த முன்னெச்சரிக்கையையும், கட்டுப்பாடுகளையும் மக்கள் மேற்கொள்ளாமல் போவதற்கு அரசே பொறுப்பாகும். உயிரிழப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்ற வாதத்தை மெய்ப்பிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனாவால் இறப்பவர்களையும் வேறு காரணங்களால் உயிரிழந்தார்கள் என்று சொல்லும்படி வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.VCK President Thirumavalavan doubt about corona deaths in Tamil nadu
அது உண்மையாக இருந்தால் மிகப்பெரிய ஆபத்தில் தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள்படும். எனவே இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பொது மக்கள் விழிப்போடு இருந்து மருத்துவமனைகளில் அவ்வாறு இறப்புகளை மறைக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios