Asianet News TamilAsianet News Tamil

’மூவரை சட்டத்துக்கு புறம்பாக விடுவிக்க துணிந்த அரசு, எழுவரை சட்டப்படி விடுதலை செய்ய தயங்குவது ஏன்?’...வன்னி அரசு


தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முன்கூட்டியே அந்த மூவரை விடுதலை செய்த இந்த அரசு, ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 அப்பாவி ஆயுள்சிறைவாசிகளை விடுவிக்காதது ஏன்?’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பினார்.

vck party vice president vanni arasu speaks agains dharmapuri bus case
Author
Chennai, First Published Nov 20, 2018, 10:34 AM IST

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முன்கூட்டியே அந்த மூவரை விடுதலை செய்த இந்த அரசு, ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 அப்பாவி ஆயுள்சிறைவாசிகளை விடுவிக்காதது ஏன்?’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பினார்.vck party vice president vanni arasu speaks agains dharmapuri bus case

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,’2008 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் ஆயுள்சிறைவாசிகள் விடுதலை செய்யப்படாமல் இருந்தார்கள்.  பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் அண்ணா பிறந்த நாளன்று ஆயுள்சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.
இந்த விடுதலை 2008 ஆண்டோடு நின்று போனது. தற்போது, எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய அதிமுக அரசு முடிவு செய்தது. ( விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தொடர் அழுத்தத்தால்) அதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள  9 மய்ய சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகள் 1850 பேரை விடுவிக்க தமிழக அரசு ஆளுனருக்கு  பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் ஆளுனரோ அந்த பரிந்துரையை ஏற்காமல் 1775 பேரை மட்டுமே விடுவிக்க ஏற்றுக்கொண்டார். அதனடிப்படையில் இதுவரை 1468 ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விடுதலையில் கோவை குண்டு வெடிப்பில் கைதான எந்த இசுலாமியரும் இல்லை என்பது வரலாற்றுச்சோகம்)vck party vice president vanni arasu speaks agains dharmapuri bus case

இந்த விடுதலையில் பெண்கள், முதியவர்கள் அடங்குவர். மாநில அரசின் அதிகாரம் 161 வது பிரிவின் கீழ் ஆயுள்சிறை வாசிகள் 10 ஆண்டுகளை கழித்தவர்கள் விடுதலை செய்யபடலாம். இந்த பொதுவிதி எல்லோருக்கும் பொருந்தும். ஆனால் மரண தண்டனையிலிருந்து ஆயுள் சிறைவாசிகளாக குறைக்கபட்ட சிறைவாசிகள் 14 ஆண்டுகள் தண்டனை கழித்திருக்க வேண்டும். இந்த அளவுகோளின் படி பார்த்தால், தர்மபுரி பேரூந்து எரிப்பு வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட அதிமுகவைச்சார்ந்த 3 சிறைவாசிகள் 11 ஆண்டும் 8 மாதங்களை தண்டன காலமாக கழித்திருக்கிறார்கள்.
இதை குற்றவியல் சட்டம் 433A எடுத்து சொல்லுகிறது.vck party vice president vanni arasu speaks agains dharmapuri bus case

14 ஆண்டுகள் கழிக்கும் முன்பே, விடுதலை செய்யப்படுவது சட்டப்படி தவறு தான். ஆனால், ஆயுள் சிறைவாசிகள் விடுதலை அடைய வேண்டும் என்பது தான் மனித நேயமாகும். அந்த வகையில் முன்கூட்டியே அந்த மூவரை விடுதலை செய்த இந்த அரசு, ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 அப்பாவி ஆயுள்சிறைவாசிகளை விடுவிக்காதது ஏன்?vck party vice president vanni arasu speaks agains dharmapuri bus case

சட்டத்துக்கு புறம்பாக பேரூந்து எரிப்பு அதிமுகவினரை விடுவிக்கும் அரசுக்கு,சட்டத்தின் படி பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளட்டோரை விடுவிக்க என்ன தயக்கம்? சட்டம் யாவருக்கும் பொதுவில்லையா?  சமமில்லையா? ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் சட்டத்தின் ஆட்சியை மாற்றலாமா? என்கிறார் வன்னி அரசு.

Follow Us:
Download App:
  • android
  • ios