Asianet News TamilAsianet News Tamil

கவனத்துக்குரிய நாடுகளின் பட்டியலில் இந்தியா.!! அமெரிக்கா எடுத்த அதிரடி .!! மத்திய அரசை எச்சரித்த எம்.பி

உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதைப்பற்றி ஆராய்ந்து அது குறித்த அறிக்கையை அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆணையம் சமர்ப்பிக்கிறது.

vck party leader thirumavalavan alert central government
Author
Chennai, First Published Apr 29, 2020, 5:42 PM IST

சங்கப் பரிவாரங்களால் இந்தியாவுக்குத் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது உடனே மத்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது,  இது குறித்து அக்கட்சியில் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் :-  சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை; எனவே, அந்நாட்டைக் கவனத்துக்குரிய நாடுகளின் பட்டியலில் வைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.  இது உலக அளவில் இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.  சிறுபான்மையினர் மீதான தாக்குதலைக் கண்டும் காணாமல் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு இனிமேலாவது தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

vck party leader thirumavalavan alert central government 

சர்வதேச மத சுதந்திர சட்டம் என்று ஒரு சட்டம் அமெரிக்காவில் இருக்கிறது.  அதன் அடிப்படையில் உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதைப்பற்றி ஆராய்ந்து அது குறித்த அறிக்கையை அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆணையம் சமர்ப்பிக்கிறது. இந்த ஆண்டு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்தியாவை கவனிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் அது வைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களையும், மத்தியில் ஆளும் பாஜக அரசு சட்ட ரீதியில் அவர்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அட்டவணைப்படுத்தியுள்ள அந்த ஆணையம், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியவற்றையும் மேற்கோள் காட்டி இருக்கிறது.

vck party leader thirumavalavan alert central government

இந்தியாவில் மத சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர் என்றும் அதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மத சுதந்திரத்துக்கு எதிராக செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்களை முடக்கி வைக்கவும், அவர்கள் அமெரிக்காவுக்கு வருவதை தடை செய்யவும் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது. சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையத்தின் அறிக்கை அரசியல் ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் இந்தியாவுக்குப் பல்வேறு இடையூறுகளைக் கொண்டு வரக்கூடும்.  இந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்க அரசு பொருளாதார தடைகளைக் கூட இந்திய அரசுக்கு எதிராக விதிக்க வாய்ப்பிருக்கிறது.  ஏற்கனவே கொரோனா நோய்த் தொற்று காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ள இந்திய பொருளாதாரம் மேலும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும்.

vck party leader thirumavalavan alert central government

பாஜக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு அரசு ஆதரவோடு சங்கப் பரிவாரங்களின் வெறுப்பு பிரச்சாரமும் தாக்குதல்களும் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகின்றன. சங்கப் பரிவாரங்களுடைய நடவடிக்கையால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த இந்திய மக்களும் தான். எனவே, இதை அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினை என்று நாம் எண்ணிவிட முடியாது. மத்திய அரசு இனியும் இத்தகைய வெறுப்புப் பிரச்சார நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காமல் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதுபோல ' கும்பல் கொலைக்கு' எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காகவும் அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.  அதன் மூலம்தான் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரையும் அடுத்து வரப்போகிற பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டுகிறோம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios