பெண் ஊழியரிடம், ‘‘வேனை எடுத்துட்டு வந்து நிறுத்திட்டு நாளு சேர்களை எடுத்து போட்டு உடைச்சா தெரியும்... போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கட்டும், என்ன வேணா பேசட்டும்” என மிரட்டியுள்ளனர்.

திருவாரூரில் உள்ள அபிராமி அண்ட் கோ பர்னிச்சர் கடையில் விசிக திருவாரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூபாலன், துணைச் செயலாளர் வீரையன், ஸ்டாலின் ஆகியோர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவுக்காக பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பணம் கேட்டு மிரட்டிய பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. இன்று திருவாரூரில் உள்ள அபிராமி அண்ட் கோ பர்னிச்சர் கடையில் விசிக திருவாரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூபாலன், துணைச் செயலாளர் வீரையன், ஸ்டாலின் ஆகியோர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவுக்காக பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. கடை உரிமையாளர் இல்லாததால், பெண் ஊழியரிடம், ‘‘வேனை எடுத்துட்டு வந்து நிறுத்திட்டு நாளு சேர்களை எடுத்து போட்டு உடைச்சா தெரியும்... போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கட்டும், என்ன வேணா பேசட்டும்” என மிரட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் ஜெயபாலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17, 2025 நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் துப்பாக்கி தொழிற்சாலையில் விசிக திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே.குமார் மாமூல் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தொழிற்சாலை நிர்வாகி மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்.கே.குமார் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூரில், திருச்சி மண்டல விசிக செயலாளர் ஒருவர் லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். ஈரோட்டில், விசிக கொடியுடன் வந்த சிலர் குவாரி உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. விசிக நிர்வாகிகள் தொடர்ந்து அத்துமீறி பணம் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாகி வருகிறது.