திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை இ.யூ.மு.லீக், மமக, சிபிஐ, மதிமுக, கொமதேக, தவாக, தமிழர் ஆதிப்பேரவை ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுக இடையேயான பேச்சுவார்த்தையில் தொகுதியைத் தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்நிலையில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி வானூர் (தனி), காட்டுமன்னார்கோவில்(தனி), செய்யூர் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகள் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 4 தனித்தொகுதிகளும், இரண்டு பொதுத் தொகுதிகளும் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.