“மணிப்பூரில் இன அழிப்பு படுகொலை“ புதுவையில் எம்.பி. ரவிக்குமார் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மாநில பாஜக அரசுக்கு எதிராக புதுச்சேரியில் விசிக தலைமையில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி பழங்குடியின மக்களுக்கு எதிரான இன அழிப்பை கண்டித்தும், வன்முறையை தூண்டி விட்ட மணிப்பூர் பாஜக அரசை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே தீப்பந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் தேவ பொழிலன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உரையாற்றினார்.
நீதிமன்றத்தில் எந்த தலைவர்களின் படமும் அகற்ற உத்தரவிடப்படவில்லை..! தமிழக அரசிடம் தலைமை நீதிபதி உறுதி
இந்த போராட்டத்தில் புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் தீப்பந்தத்தை பிடித்தபடி மணிப்பூர் பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது திடீரென்று மழை பொழியவே போராட்ட களத்தை விட்டு யாரும் செல்லாமல் அமர்ந்திருந்த நாற்காலிகளை குடையாக மாற்றி தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தபடி கண்டன கோஷங்களை எழுப்பியதால் போராட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரியில் கஞ்சா கும்பல்களுக்கு இடையே மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு
இதுகுறித்து விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மணிப்பூரில் இன அழிப்பு படுகொலை நடந்து வருகிறது. கலவரத்தை தூண்டிவிட்ட மணிப்பூர் அரசை கண்டித்தும், கலவரத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மீது மத்திய அரசு மெத்தனமாக இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணிப்பூர் இன மக்களை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.