பெரம்பூர் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட ஐ.ஜே.கே கட்சி தலைவர் பாரிவேந்தர் 68 ஆயிரத்து 361 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை விட 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். என்.ஆர்.சிவபதி 28 ஆயிரத்து 502 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். 

அதேபோல் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 38 ஆயிரத்து 130 வாக்குகள் பெற்று  பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை பின்னுக்குத் தள்ளியுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் வெறும் 14 ஆயிரத்து 487 வாக்குகளை மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். 

அதேபோல் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 31 ஆயிரத்து 562 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை பின்னுக்குத் தள்ளியுள்ளர் ஏ.கே.மூர்த்தி 18 ஆயிரத்து 433 வாக்குகளை மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.