பிரதமர் மோடி போட்டியிடும் மத்திய பிரதேசம் வாரணாசி தொகுதியில் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு மற்ற கட்சி வேட்பாளர்களை விட நெருங்க முடியாத அளவிற்கு பெரும் வித்தியாசத்தில் வாக்குகளை பெற்றுள்ளார். 

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 2 லட்சத்து 63 ஆயிரத்து 583 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை அடுத்து சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ் 79 ஆயிரத்து 523 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 49 ஆயிரத்து 529 வாக்குகளை பெற்று கருத்துக் கணிப்பில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி பிரதமர் மோடி 1 லட்சத்து 84 ஆயிரத்து 60 வாக்குகள் மோடி முன்னிலை வகிக்கிறார். அதிக வாக்குகள் முன்னிலை பெற்று வருவதால் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.