Asianet News TamilAsianet News Tamil

தேர்தலுக்கு முன்பே நான்‌ சொன்னது தற்போது உண்மையாகியுள்ளது.. வன்னியர்களுக்கு சப்போர்ட் செய்யும் விஜயகாந்த்..!

மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில்‌, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியில்‌ சட்டம்‌ இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,‌ சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம்‌ ரத்து செய்துள்ளது.

vanniyar reservation canceled... Reconsider the verdict: Vijayakanth
Author
Tamil Nadu, First Published Nov 2, 2021, 6:06 PM IST

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தால் தங்கள் சமூகத்தினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. 

இதையும் படிங்க;- நீதிமன்ற தீர்ப்பை எண்ணி கலங்காதீங்க.. பறிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்காமல் பாமக ஓயாது.. ராமதாஸ் சபதம்

vanniyar reservation canceled... Reconsider the verdict: Vijayakanth

அனைத்து தரப்பு வாங்களையும் கேட்ட நீதிபதிகள் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசயல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க;- அடப்பாவிகளா.. 80 வயது கிழவியை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!

vanniyar reservation canceled... Reconsider the verdict: Vijayakanth

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில்‌, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியில்‌ சட்டம்‌ இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,‌ சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம்‌ ரத்து செய்துள்ளது.

இதையும் படிங்க;- ஐ.டி. ஊழியருக்கு எமனாக மாறிய பள்ளம்.. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!

vanniyar reservation canceled... Reconsider the verdict: Vijayakanth

தேர்தலுக்காகவும்‌, கூட்டணிக்காகவும்‌ மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகத் தேர்தலுக்கு முன்பே நான்‌ சொன்னது தற்போது உண்மையாகியுள்ளது. இருப்பினும்‌ 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை நீதிமன்றம்‌ ரத்து செய்திருப்பது வன்னிய சமூக மக்களுக்குப் பெரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இட ஒதுக்கீடு விவகாரத்தில்‌ வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரீசிலனை செய்து, அனைத்துத் தரப்பு மக்களும்‌ பயனடையும்‌ வகையில்‌ தீர்ப்பு வழங்க வேண்டும்‌ என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios