Asianet News TamilAsianet News Tamil

மரம் வெட்டி ராமதாசு கும்பலை போல நீங்களும் ஏமாற்றலாமா? பாமகவை வம்பிழுத்த விசிக வன்னி அரசு!

ஜக்கி வாசுதேவ் நடத்தும் ‘காவிரிக்கூக்குரல்’ நிகழ்வில் நேற்று கலந்து கொண்ட 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டி பேசியுள்ளார். இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக விசிக வன்னி அரசு பாமகவையும், அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸையும் வம்பிழுத்துள்ளார்.

vanni arasu raised question to edappadi palanisamy
Author
Chennai, First Published Sep 16, 2019, 1:32 PM IST

ஜக்கி வாசுதேவ் நடத்தும் ‘காவிரிக்கூக்குரல்’ நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டி பேசியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக விசிக வன்னி அரசு பாமகவையும், அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸையும் வம்பிழுத்துள்ளார்.
 
மத்திய அரசின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு இருக்கும் திரு.ஜெகதீஷ் வாசுதேவ்( ஜக்கி) நடத்தும் ‘காவிரிக்கூக்குரல்’ நிகழ்வில் இன்று கலந்து கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். கலந்து கொண்டதில் தவறில்லை. பாராட்டுவதில் கூட தவறில்லை. ஆனால்,” மரம் நடுவதில் ஜத்குருவுக்கு அரசு உறுதுனையாக எனது அரசு இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்.

இது சரியான முடிவா?

ஜக்கி வாசுதேவ் கோவை வெள்ளியங்கிரி மலையையே அழித்து அவரது மத நிறுவனத்தை நிறுவியிருக்கிறார். எத்தனை லட்சம் மரங்களை அழித்தார்கள் என்று ஊடகங்கள் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தின.

vanni arasu raised question to edappadi palanisamy

அப்படிப்பட்ட ஜக்கி வாசுதேவ் தான் இன்றைக்கு ரூபாய் 42 க்கு விற்று வணிகம் செய்து வருகிறார்.இப்படியான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சரே ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவளித்திருப்பது சரியா? இது இன்னும் தீவிரமாக ஜக்கி வாசுதேவின் ஏமாற்று வேலைக்கு துனைபோகாதா? அந்த கூட்டத்தில் முதல்வர் மேலும் பேசும்போது, “மரங்கள் பாதுகாக்கப்பட்டால் தான் ஓசோன் படலம் பாதுக்காக்கப்படும்” என்று பேசியுள்ளார். வெள்ளியங்கிரி மலையை அழித்துவிட்டு மரங்களை நடுவதாக ஆடும் நாடகத்துக்கு முதலமைச்சரே துனை போகலாமா? இந்த அழிப்பு முதல்வருக்கு தெரியாதா?
( மரங்களை வெட்டி விட்டு பசுமைத்தாயகம் நடத்தும் ராமதாசு கும்பலை போல).

vanni arasu raised question to edappadi palanisamy

உண்மையாகவே, முதல்வருக்கு மரங்கள் நடுவதற்கு அக்கறை இருந்தால், தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கில் பனை மரங்களை நட்டுவரும் விடுதலைச்சிறுத்தைகளை பின்தொடர்ந்து அரசே நட வேண்டும். ஏனென்றால் பனை மரங்கள் தான் மண் வளத்தையும் நீர் பிடிப்பையும் பாதுகாத்து வருகிறது.

அப்படிப்பட்ட பனை மரங்களை விடுதலைச்சிறுத்தைகள் தனித்து ஒரு இயக்கமாக முன்னெடுத்து வருகிறது.இதை அரசே முன்னெடுப்பதுதான் சரியாக இருக்கும். அதே போல, எட்டுவழிச்சாலையால் இயற்கை வளமே அழிந்து போய்விடும்.

vanni arasu raised question to edappadi palanisamy

லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து போகும் என்று சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் ஆதாரத்தோடு வெளியிட்டு இருக்கிறார்கள். உண்மை நிலை இப்படி இருக்க முதல்வர் பழனிச்சாமி அவர்கள் ஜக்கி வாசுதேவ் போலவே மக்களை ஏமாற்றுவது சரியா? எம்ஜிஆர் ‘பாடிய’பாடல் தான் ஞாபகம் வருகிறது எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... என இவ்வாறு கூறியுள்ளார். அதாவது, வன்னி அரசின் இந்த பதிவில், எடுத்துக்காட்டுக்கு கூட பாமகவையும், அதன் நிறுவனர் ராமதாஸையும் மரம் வெட்டி ராமதாஸ் கும்பல் என சொல்வதை பாமக ஐடி விங் காரசாரமான பதிலடியை கொடுத்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios