மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் பெண்களுக்கு என ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து செய்து கொடுத்தவர் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் புகழ்ந்து பேசினார். 

2 பெண் அமைச்சர்களுக்கும் பின் வரிசையில் இடம்

சென்னை சூளைமேட்டில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான மகளிர் மாநாடு நடைபெற்றது. இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசியவர், மற்ற கட்சியினர் மகளிர் ஓட்டு வேண்டும் என்று யோசிப்பார்கள் ஆனால் அவர்களுக்கு அதிகாரம் பொறுப்பு தர வேண்டும் என்று யோசிப்பவர்கள் பாஜக மட்டும்தான்.

இந்தியாவில் நல்ல கழிப்பிடம் தர வேண்டும் என்பதும், முக்கியமாக பெண்கள் பெயரில் வீடு திட்டம் போன்றவை நிறைவேறி உள்ளது. பெண்களை இலட்சாதிபதி மாற்றுவேன் என்று நாட்டின்‌ பிரதமர் உறுதியெடுத்துள்ளார். தமிழகத்தின் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். தமிழக அமைச்சரவையை பாருங்கள் 2 பெண் அமைச்சர்கள் இருக்கிறார்கள். 2 பெண் அமைச்சர்களும் சட்டப்பேரவையில் பின் வரிசையில் அமர்ந்திருப்பார்கள் . 

விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா? உதயநிதி ஸ்டாலின் என்ன இப்படி சொல்லிருக்காரு

பெண்களுக்கான திட்டத்தை நிறுத்திய திமுக

ஆனால் நாட்டின் பலம் பொருந்திய பதவியில் நிர்மலா சீத்தாராமன் இருக்கிறார். இவ்வாறு பெண்களுக்கு அதிகாரம் வழங்கியவர் பிரதமர் மோடி என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பெண்களின் துயரத்தை வறுமையை உணர்ந்தவர் பிரதமர் மோடி. ஆனால் திமுக அரசு இலவச பேருந்துகளையும் நிறுத்தியுள்ளது. ஸ்கூட்டி திட்டத்தை நிறுத்திய அரசு திமுக அரசு.1000 ரூபாய் பெண்களிடம் கொடுத்தா விட்டு அவர்களின் கணவர்களிடம் இருந்து 10,000 ரூபாய் டாஸ்மார்க்கில் பெற்று கொள்கிறது திமுக அரசு என விமர்சித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியில் சாதாரண பெண்மணி கூட அரசியலில் உயர்ந்த பதவியில் இருப்பதை உறுதி செய்தவர் பிரதமர் மோடி. இருக்கின்ற அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு அதிகப்படியான முன்னுரிமைகளும் வாய்ப்புகளையும் வழங்குவது பாரதிய ஜனதா கட்சி தான்.

 இந்தியா கூட்டணி டீ, டிபன் மட்டுமே சாப்பிட்டது..

கிட்டத்தட்ட 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கி வருகிறோம். வருகின்ற தேர்தலில் கூட பெண்களுக்கு அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நினைக்கும் அனைத்து கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என நினைக்கிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஒரு பலமான கூட்டணியாக இருக்கும். இந்தியா கூட்டணி என்று ஆரம்பித்தார்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று டீ, டிபன் சாப்பிட்டார்கள் இன்று அவர்கள் ஒவ்வொருத்தராக எங்கள் கூட்டணி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் மோடியை தவிர்த்து வேறு யாரும் பிரதமராக முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

இந்தி திணிப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்ப்போம்.. இதனை இந்தி வியாபாரி அண்ணாமலை புரிந்துக்கொள்ளனும்- அதிமுக