சமூக நலத்துறை அமைச்சராகவும் அதற்கு முன்பு ஒருமுறை அமைச்சராகவும் வளர்மதியை அமர்த்தி அழகு பார்த்தார் ஜெயலலிதா. அவரது மறைவிற்கு பிறகு நெட்டிசன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சிக்கி சின்னாபின்னமானவர்களில் ஒருவர் வளர்மதி.

காரணம் ஜெ உயிருடன் இருந்த போது அவருக்காக ,மண்சோறு சாப்பிடுவது, தீச்சட்டி ஏந்துவது என பல விஷயங்களை செய்தார்.

ஆனால் அவர் மறைந்த அன்று வளர்மதி சிரித்து கொண்டிர்ருப்பது போல ஒரு படம் வெளியானது.

மேலும் சின்னம்மா அப்ப்ரூவர் ஆகியிருந்தால் ஜெயலலிதா அவ்வளவுதான் என்ற ஒரு பேட்டியும் வெளியாகியது.

இதனால் ஜெ. ஆதரவாளர்கள் கொதித்து போனார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளர்மதிக்கு பல மீம்ஸ்கள் போட்டு தாக்கி வந்தார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை கடுப்பேற்றும் விதமாக இன்னும் பல பழைய கதைகளை கிளறி விடுகின்றனர் வளர்மதி எதிர்ப்பாளர்கள்.

குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் இருந்த வளர்மதி ஜெயலலிதாவுக்கு எதிராக அப்போது தஞ்சாவூரிலிருந்து கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி அப்போது தினசரிகளில் வெளியாகியிருந்தது.

அதை இப்போது வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளனர் நெட்டிசன்கள்.

வளர்மதியின் அறிக்கையின் விவரம் இதோ...

"தஞ்சையில் சூலாயுதத்தை பெற்றுகொண்டதும் ஜெயலலிதா தன்னை பத்ரகாளியாக கருதிக்கொண்டு நரபலிக்கு ஆட்களை தேடி கொண்டிருக்கிறார்.

அம்மையாரை போல சினிமாவில் செல்லாக்காசு ஆனவுடன் அரசியலுக்கு வந்தளல்ல நான்.

அம்மா என்று சொல்ல தெரிந்த பிறகு நான் சொல்லிய வார்த்தைகளே அண்ணாவும் எம்ஜிஆரும்தான்.

மாக்கியவல்லிக்கும், சாணக்கியனுக்கும் அரசியலை சொல்லிதர புறப்பட்டிருக்கும் போயஸ் கார்டன் அம்மையாரை அன்போடு அறைகூவி அழைக்கிறேன்.

என்னைவிட எல்லாம் தெரிந்த அம்மையார் என்னோடு ஒரே மேடையில் அரசியல் பேச தயாரா?

வேண்டாம் அதுகூட அவரது தகுதிக்கு அழகில்லை என்று கருதுவாரானால் என்னை விட எல்லா தகுதியும் பெற்றிருக்கும் அவரோடு இருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எவரையாவது ஒரே மேடையில் என்னோடு பேச அனுப்பி வைக்க தயாரா? எதற்கும் நாவடக்கம் தேவை"

இவ்வாறு அந்த அறிக்கையில் பா.வளர்மதி கூறியிருக்கிறார்.