தமிழ்நாடு பாடநூல கழகத்தின் தலைவராக பா.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்,

தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதிமுக பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்ட பின்பு அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவருக்கு முதன்முறையாக பெரிய பதவி கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி தனது குடும்பத்துடன் அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவை போயஸ் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.