இந்தியாவின் 10வது பிரதம மந்திரியாக இருந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய். நான்கு முறை  சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், 3 முறை பிரதம மந்திரி பதவி வகித்துள்ளார்.

மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்பட்டவர் வாஜ்பாய். 

இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற, வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பு அளவிட முடியாத அளவிற்கு மிகவும் பெரியது. தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மக்களுக்காக வாழ்ந்தவர்.

அதே போல் தன்னலம் பாராமல், பொது நலத்தோடு மக்கள் சேவையாற்றிய வாஜ்பாய் 1986 முதல் ஒரே ஒரு கிட்னியுடன் வாழ்ந்து, தொடர்ந்து மக்கள் சேவையாற்றினார் வாஜ்பாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

93 வயதாகும் இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது, பிரதமர் மோடி, மற்றும் முக்கிய  அமைச்சர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் வாஜ்பாய்க்கு  சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாகவும் 93 முதுமை காரணமாக  அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை  சில நேரங்களில் அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறிவந்தனர். மேலும் அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததாக தெரிவித்திருந்த நிலையில் இன்று மாலை வாஜ்பாய் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழக முதலமைச்சர், மற்றும் திமுக செயல் செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் டெல்லி புறப்பட உள்ளனர். தி போல் நல்லை வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், தமிழக பொது விடுமுறை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.